Author Topic: செட்டிநாட்டுச் மல்லி சாதம்  (Read 480 times)

Offline kanmani

கொத்தமல்லித் தழை    & ஒரு கட்டு
பச்சை மிளகாய்        & 4
இஞ்சி, பூண்டு விழுது    & ஒரு ஸ்பூன்
கடுகு                & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு        & ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை        & ஒரு ஆர்க்
நெய்                & 4 ஸ்பூன்
சாதம்            & 150 கிராம் பச்சரிசியை விரைப்பாக வடித்து எடுத்தது
உப்பு                & தேவைக்கேற்ப
முந்திரிப் பருப்பு        & ஒரு ஸ்பூன்
சாதத்தை விரைப்பாக வடித்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு சிவந்தது, அரைத்ததைப்போட்டு பச்சை வாடை போக வதக்கி, ஆறிய சாதத்தில் மீது போட்டுக் கிளறவும்.
புளிக் குழம்பு செய்து முடித்து இறக்குவதற்கு முன், ஒரு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய், 2 முந்திரிப்பருப்பு,  ஸ்பூன் சோம்பு அரைத்து குழம்பில் கலக்கி கொதித்ததும் இறக்கினால், குழம்பு வாசமாக இருக்கும்.