இரண்டு வருடம் பூர்த்தி செய்யும் எங்கள் FTC நாயகனே
இணையதளத்தில் இனையில்லாதவனே
உன் அரட்டை அரங்கில் எத்தனையோ கேலி கிண்டல்
மற்றும் அன்புப்பகிர்வுகள் உன்னை தேடி வந்தால்
மன அழுத்தம் தான் குறையுமே ...
பல நுறு நண்பர்களை எனக்களித்தவனும் நீயே
அடுத்தவர் உணர்வுகளை மதிப்பளிக்க
கற்றுத்தந்தவனும் நீயே
Forum என்று வந்துவிட்டால்
உலகத்து அனைத்து செய்திகளும் உன்னிடத்திலே
கலைஞர்களின் படைப்புகளை காவியமாக்குபவனே
FM ,பாட்டு, இன்னும் பலவற்றை அமைதியாய் எமக்களித்தவனே
உனக்கும் உன்னை வழிநடத்துபவருக்கும்
நன்றிகள் பலகோடி நல்ல நண்பர்களை
தேடி தந்ததால் நீயும் என் நண்பனே
வாழ்க இன்னும் பல்லாண்டுகள்
வளர்க உன் இணைய சேவைகள்....
இணையத்தில் தமிழ் உறவுகள் இணைந்து உறவாட
உன்னை போல் ஒரு உறவு இல்லை என்ற
பெருமிதத்தோடு மென்மேலும் நீ வளர வாழ்த்துகிறேன்...
அயராது ஒலிக்கும் உன் வானொலி ,சலிப்பின்றி சாதிக்கும் உன் மன்றம்
திசை எங்கும் இசையால் கட்டி போடும் பாடல் களஞ்சியம்
என உன் பக்கங்களை பதிவு செய்ய இந்த ஒரு பக்கம் எனக்கு போதாது.
வளர்க நீ...தமிழ் சுவை பருக எங்களுக்கு உன் சேவைகளை தொடர்ந்து தருக...