Author Topic: ~ கிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா !! ~  (Read 658 times)

Offline MysteRy

கிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா !!




கிராண்ட் கன்யன் அல்லது மாபெரும் பள்ளம் என்பது அமெரிக்காவின்அரிசோனா பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளமாகும். கொலராடோஆற்றின் போக்கில் அமைந்துள்ள இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 2 பில்லியன் ஆண்டுகளில் கொலராடோ ஆறு இப்பள்ளத்தினை உருவாக்கியுள்ளது. 350 கிமீ நீளமுள்ள கிராண்ட் கன்யன் ஒரு மைல் வரை சில இடங்களில் ஆழமுள்ளது.


இதனைப் பார்க்க உலகெங்குமிலிருந்து மக்கள் வருகின்றனர். கொலராடோ ஆற்றில் படகுகளில் பயணித்துக் கொண்டும் இதனைக் கண்டு களிக்கலாம். சிலர் இங்கு நடைப்பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர். கிராண்ட் கன்யன் வடக்குப்பகுதியில் உள்ள நிலம் வடக்கு விளிம்பு (North Rim)என அழைக்கப்படுகிறது.தென்பகுதி தெற்கு விளிம்பு எனப்படுகிறது.இந்த விளிம்புகளிலிருந்துஅடிப்பகுதிக்குச் செல்ல பாதைகள் உள்ளன. இவை முடிவடையும் அடிப்பாகம் பான்டம் ரான்ச்(Phantom Ranch) எனப்படுகின்றன. இங்கு நடைப்பயணிகள் இரவு தங்க வசதிகள் உள்ளன.

உலகின் இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் அண்மையில் Google Street view காட்சிகள் இணைக்கப்பட்டன.

முதுகில் சுமந்து செல்லும் Andriod இயங்கு தளத்தில் இயங்கும் 18 lens கேமரா செங்குத்தான பள்ளத்தாக்கு படமாக்கப்பட்டு உள்ளது. 9,500 அதிகமான panoramas காட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது. கால்களால் நடந்து சென்று பலத்த சிரமத்தின் மத்தியில் இவை படமாக்கப்பட்டதாக Google குறிப்பிட்டுள்ளது.