Author Topic: கருகமணி  (Read 1333 times)

Offline Gayathri

கருகமணி
« on: June 28, 2013, 05:06:33 PM »

'தாலி'யையாவது... சரி, அது மதம் சார்ந்த விஷயம்னும்... 'திருமணத்தில் கணவன்-மனைவிக்கு இடைப்பட்டது' என்றும் கொஞ்சமாவது ஆசுவாசப்பட்டு மனம் பொறுத்துக்கொள்ளலாம்.

ஆனால்... இந்த 'கருகமணி' இருக்கே..! இதுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பது மட்டுமல்லை மேட்டர்... அந்த கருகமணியை மணப்பெண்ணுக்கு யாரோ ஒரு வயசான பெண்மணி கட்டி விடுவார்..! பெரும்பாலும் மணப்பெண்ணின் மாமியார் செய்வார் இந்த வேலையை.

ஒருக்காலும் மணமகன் கட்டிவிட மாட்டார்.  'அப்போ... கல்யாணம் யாருக்கும் யாருக்கும்'ன்னு இந்நேரம் இதை புதுசா கேள்விப்படுற யாருக்காவது சந்தேகம் வந்திருக்குமே..?

ஆமாம்... மூடநம்பிக்கையே வெட்கி தலை குனிந்து ஓடி விடும் அளவுக்கு 'கருகமணி' அவ்ளோ பெரிய மூடத்தனம்..! இப்போ பெரும்பாலும் அது ஒழிஞ்சிருச்சு..!

Offline Yousuf

Re: கருகமணி
« Reply #1 on: July 03, 2013, 04:20:06 PM »
இஸ்லாமிய மார்க்கத்தில் கருகமணி என்பதற்கும் திருமனதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபது உண்மைதான். இந்த கலாச்சாரம் தோன்ற கரணம் பிற மத செயல் பாடுகளை இஸ்லாமியர்கள் பின்பற்ற துவங்கியதுதான். இது மட்டும் அல்ல இஸ்லாம் பற்றிய சரியான கொள்கையும் அதை பற்றிய கல்வியும் இஸ்லாமிய மக்களிடம் குறைவாக இருபது தான்.

இதை பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிதுள்ளர்கள்.

நபி(ஸல்)கூறினார்கள் :
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512

"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.!" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்