என்னென்ன தேவை?
பப்பாளி - 1,
வாழைப்பழம் - 2,
தயிர் - 1 கப்,
சர்க்கரை - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
எல்லாப் பொருள்களையும் மிக்சியில் போட்டு, மிருதுவாக அடிக்கவும். அரை மணி நேரம் குளிர வைத்து, மேலே பப்பாளி மற்றும் வாழைப்பழத் துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறவும். தயிர் புளிப்பில்லாமல் இருக்க வேண்டியது முக்கியம். தயிர் பிடிக்காதவர்கள், பால் சேர்த்து, மில்க் ஷேக்காகவும் செய்யலாம்.