Author Topic: தமிழா தமிழை பேசு  (Read 1608 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தமிழா தமிழை பேசு
« on: October 27, 2011, 09:02:42 AM »

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
சொல்ல இனிமை
கேட்க இனிமை
ஆனால் எங்கே தமிழ்???

பிற மொழிக்காரன்
சொற்ப வார்த்தைகள்
கற்று நம்மை
ஆண்டான்
ஆண்டாண்டு காலமாய்...
மறக்க நினைத்தது இல்லை
அவன் மொழியை

நாமும் கற்றோம் பல மொழிகள்
கற்றதற்காய் மறந்தோம்
நம் மொழியை..

அயல் நாடுகளுக்கு சென்றோம்
அவன் மொழி நம்மை நசுக்கும்
தமிழ் பெயர் பலகை
கண்டு ஓடி செல்வோம்
தமிழ் மொழிக்காக..

வெட்கி தலைகுனியும்
நேரம் அல்லவா அது..:mad:
தமிழ் பேசினால்
படிக்காதவன் என்ற நிலை

மொழி வளர்த்தோம்
பேன்சி ஸ்டோர் என்று
ஆங்கிலத்தை தமிழில் வளர்த்தோம்...

ஆங்கில புலமை கண்டு
அண்ணாந்து பார்த்ததுண்டு
சரளமாய் பேச முடியாமல்
தயங்கி இருக்கிறேன் பல முறை...
தமிழர்களுக்குள்ளே
தமிழ் இல்லை..

தமிழா தமிழை பேசு
நீ வாழும் காலம் வரை
பகட்டு பேச்சு நமக்குள்
எதற்கு???

ஆயிரம் அழகு சாயம் பூசினாலும்
மஞ்சளுக்கு ஈடாகுமா????
தமிழை மறக்காமல்
பிற மொழி பயில்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: தமிழா தமிழை பேசு
« Reply #1 on: October 27, 2011, 01:16:28 PM »
தமிழை பேசினால் மட்டும் போதாது தமிழை தமிழாக பேச முயற்சிக்க வேண்டும்

நான் முயன்று கொண்டிருக்கிறேன்  :D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழா தமிழை பேசு
« Reply #2 on: October 27, 2011, 09:32:24 PM »
nalla kavithai ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: தமிழா தமிழை பேசு
« Reply #3 on: October 28, 2011, 06:30:06 AM »
thankss remo and rose


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்