Author Topic: வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்  (Read 587 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் எலுமிச்சை சாற்றில் புதினா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் எலுமிச்சை சாறு கலவை மற்றும் ஆலிவ் ஆயிலை தெளித்து, பரிமாறினால், சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி!!!