என்னென்ன தேவை?
முட்டையின் வெள்ளை-1/4
உப்பு-1தேக்கரண்டி
மிளகு-1தேக்கரண்டி
கீரை 1 கையளவு
தக்காளி-1/4துண்டாக்கப்பட்டது.
வெங்காய தூள்1/4 தேக்கரண்டி
மொஸ்ஸரல்லா சீஸ்1/4 கப்
குறிப்பு: விருப்பம் இருந்தால் அஸ்பாரகஸ், காளான்கள், சூடுபடுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
எப்படி செய்வது?
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை, கீரை, மிளகு, வெங்காய தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நடுத்தர வெப்பத்தில் வைத்து முட்டை கலவையை கடாயில் ஊற்றி 4 நிமிடங்கள் வேகவைத்து அகன்ற கரண்டி ஒன்றை எடுத்து 2ஆக மடித்துகொள்ள வேண்டும். பின்னர் வெப்பத்தை குறைக்க சீஸ் மற்றும் தக்காளியை தூவி முட்டையை இரண்டு பக்கம் திருப்பி போட்டு சீஸ் உருகியதும் ஒரு நிமிடம் வேகவைத்து பரிமாறவும். காய்கறி முட்டை ஆம்லெட் ரெடி.