Author Topic: வெங்காயக்குழம்பு  (Read 743 times)

Offline kanmani

வெங்காயக்குழம்பு
« on: May 03, 2013, 11:17:13 PM »

    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 
சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
   

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்து கரைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
   

புளி தண்ணீர் கொதித்ததும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
   

வெங்காயம் வதங்கியதும் அதை கொதிக்கும் குழம்பில் கொட்டவும்.
   

குழம்பை மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
   

குழம்பு ஒரளவு திக்கான பதம் வந்தததும் ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்.
   

சுவையான வெங்காயக்குழம்பு தயார்.