Author Topic: பிறந்த குழந்தையை விற்க ஃபேஸ்புக்கில் 8 லட்ச ரூபாய்க்கான டீல்!  (Read 4208 times)

Offline kanmani

பிறந்த குழந்தையை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மூலமாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபருக்கு விற்ற சில விசமிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.



பிறந்த குழந்தையை ஃபேஸ்புக்கில் விற்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரி குற்றம் நடப்பதும் இதுவே முதல்முறை. குர்ப்ரீத் சிங் என்பவர் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு இன்டர்நெட் வழியாக குழந்தையின் படத்தைக்காட்டி ரூ.8 லட்சங்கள் பேரம்பேசியதும் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதியன்று பிறந்த நூரி என்பரின் குழந்தை, மருத்துவமனையிலேயே காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகராளிக்கப்பட்டது.

இளையதளபதி விஜயின் சில ஃபேஸ்புக் பக்கங்கள்...

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நூரியின் தந்தை பெரோஸ் கான் என்பவரும் மருத்துவமனையில் உள்ள சிலரும் சேர்ந்துதான் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று குழந்தையை ரூ.8 லட்சங்களுக்கு விற்றது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி விற்கப்பட்ட குழந்தையை தாயிடமே ஒப்படைத்தனர்.