Author Topic: போட்டோஷாப் தேவையில்லை...இன்டர்நெட் மட்டும் போதும்...  (Read 1537 times)

Offline kanmani

சிலர் போட்டோஷாப் மென்பொருள் பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பதுடன் அதில் பல்வேறு வித்தைகளையும் காட்டுவார்கள். போட்டோஷாப் மென்பொருளை விலைக்கு வாங்கவேண்டும் என்றால் குறைந்தது ரூ.25 ஆயிரம் வேண்டும். 'நண்பரிடமிருந்து' வாங்கவேண்டுமென்றால், டோரென்ட்களில் 2 தினங்களுக்கும் மேலாக போராடி பல ஜிபிகள் கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டியுள்ளது. இது தவறான முறைதான். இருந்தாலும் பெரிய அளவில் தொகைகள் வீணடிக்கவும் முடியாது. இப்பொழுது என்ன செய்ய?

நீங்கள் போட்டோஷாப் மென்பொருள்களில் உள்ள பல்வேறு வசதிகளை பயன்படுத்துபவர் என்றால் அதை விலைக்கு வாங்குவதே நலம். இல்லை ஒருசில வசதிகள் இருந்தால் போதுமானது என்றால் பல்வேறு இணையதளங்கள் இலவசமாகவே இதை வழங்க கடைவிரித்து காத்துள்ளது. அதுபற்றிய தகவல்களையே இங்கே வெளியிட்டுள்ளோம்.