Author Topic: கனவே கலைந்து விடாதே!!!  (Read 1450 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கனவே கலைந்து விடாதே!!!
« on: October 17, 2011, 09:50:20 PM »

கனவு கண்டேன்..
கண்ணில் கண்ட காட்சிகள்
கனவில் வந்தன....
கனவில் வந்தவனே
கனவோடு செல்லாமல்
கண்ணாளனாய் நீ வேண்டும்....
கண்ணோடு கண் பேசின..
காந்த கண் பார்வை
கள்ளம் அற்ற உன் பேச்சு...
கலங்கி போனது என் உள்ளம்....
காலம் எல்லாம் வேண்டும் நீ...
காலம் நம்மை சேர்குமோ என்றேன்....
கலங்கிய கண்ணோடு மௌனமானாய்
கனவு தான் என்றாலும்..
கால் நூற்றாண்டு வாழந்த திருப்தி என்னுள்...
கனவு நாயகனே...
கனவில் இருந்து செல்லாதே...
கண் உறக்கம் கலைய விருப்பம் இல்லை..
கண் உறக்கம் விழித்தால்
கலைந்து போவாய் நீ
கண் விழிக்காத உறக்கம் வேண்டும்..
கனவோடு வாழ்ந்தாலும் போதும்
கண்ணாளனே...
கண்ணோடு கண் வைத்து பேசும்
கனிவான வார்த்தை போதும்...
கண்ணீர் எல்லாம்
கரைந்து போகும்.....
கனவே கலைந்து விடாதே!!!
« Last Edit: October 17, 2011, 09:55:45 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கனவே கலைந்து விடாதே!!!
« Reply #1 on: October 18, 2011, 06:01:01 PM »
Quote
கனவோடு வாழ்ந்தாலும் போதும்
கண்ணாளனே...

hmmmmmmmmmmmmmmmmmmm  ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: கனவே கலைந்து விடாதே!!!
« Reply #2 on: October 19, 2011, 06:00:00 PM »
enna diii hmmm :D dont drag here :D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்