என்னென்ன தேவை?
சிக்கன்-1/2 கிலோ
பட்டை கிராம்பு சோம்பு – சிறிதளவு
சின்ன வெங்காயம்- 1கப்
இஞ்சிப் பூண்டு விழுது -1டீஸ்பூன்
பச்சை மிளகாய் -4
தக்காளி -2
கொத்தமல்லித்தூள்-1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிக்கனை மஞ்சள்தூள் போட்டு 1 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர் சின்ன வெங்காயத்தை 1 கப் அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, 1 பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும்.
அரைத்த பட்டை ,கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும். வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும். வேக வைத்த சிக்கனை அதில் சேர்க்கவும். அரைத்த கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். கொத்தமல்லித்தூள் 1 டீஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். சுவையான பொள்ளாச்சி மல்லிசிக்கன் ரெடி.