என்னென்ன தேவை?
ஓமப்பொடி - 1 கப்,
தக்காளி - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
தக்காளியை பொடியாக நறுக்கவும். எண்ணெயும் நெய்யும் சேர்த்துக் காய வைத்து, சீரகம் தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். பிறகு தக்காளி சேர்த்து, உப்பு சேர்க்கவும். தக்காளி நன்கு கரையும் வரை வதக்கி, மிளகாய் தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும், 2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும், அதில் ஓமப்பொடி தூவி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி, தளதளவென்ற பக்குவத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை அப்படியேவும் சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.