அன்னாசி வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பழங்களுள் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடைய அன்னாசியும் ஒன்று. இதனை சாப்பிட்டால், எலும்புகள் வலுவடைதல், சளி மற்றும் ஜலதோஷம் குணமாதல், ஈறுகள் நன்கு ஆரோக்கியமாக இருப்பது மற்றும் செரிமானத்தை அதிகரிப்பது போன்ற நன்மைகள் கிடைக்கும்.