யாரோடு யாருக்கு
எப்போது காதல் வரும்
யாருக்கு தெரியும்?
எந்த மோதல் காதலாகும்
எந்த காதல் மோதலாகும்
யாருக்கு தெரியும்?
இதயத்தில் அன்று
இறக்கிடாமல்
இறுக்கி வைத்திருக்கிறேன்.
இன்று எதற்காக?
மீண்டும் மீண்டும் சொன்னேன்
பிடிக்காததது பிடிக்குமென்று...
வேணுமென்று செய்து விளையாடுகிறாய்
என் எதிர்ப்போடு
நான் எதிர்பார்த்தேன் பிரியத்தை
நீயே! எதிர்பார்க்கிறாய் பரிவை.
போ நீ வரும் வரை
இப்படியே இருப்பாய்
என் இதயத்தில்.....
உனது வாழ்நாள் வரை எனது
ஆத்மா உன்னைச்சுற்றும்
அன்போடு ...! ஏனோ நீ இறந்த பின்பு
நமது ஆத்மா காதல்
செய்யட்டும் காற்றோடு ...!..