உன்னால்
உன் நினைவுகளால்
உறக்கமிழந்து-என்
உயிர் வாடும் இவ்விரவிலே,
உன் மனம் எங்கோ...?
உண்மை காதலினை
உணராதோ... ?
உதடு பொய் பேசும்..
உள் மனம்
உண்மை பேசுமென்று
உன் மனதிற்கு தெரியாதோ...?
உத்தமனான
உன் முகம் பாராமல்
உறைந்து ஓடும்
உதிரத்தை நீ அறிவாயோ... ?
உன்னதமான தென்றல் மொழியை
உதிர்க்காமல் ஊமையானதால்
உயிரும் சுவாசிக்க மறுப்பதை
உணர்வாயோ... ?
உடலும் உள்ளமும்
உறுதியாய்
உன் வரவையே நினைத்து
உருகி கொண்டிருக்க அதை
உணராமல் நீயும்
உறங்குவதும் என்னை
உதிர்த்து விட நினைப்பதும் ஞாயமாகுமோ..?
உலகத்தில் வாழ்வதும்
உலகமே நீயாய் வாழ்வதும் நானே...
உடனே வந்து விடு-என்
உயிர் பிழைக்க
உத்தரவாதத்தோடு
உரிமை ஒன்றிங்கு தந்து விடு...