ட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அவ்வப்போது துடைக்க வேண்டும். இது அவ்வளவு பெரிய கடினமான வேலை அல்ல. ஆனால் அதுவே புதிய மரத்தாலான தரையை துடைப்பது என்பது மிகவும் கடினமான மற்றும் மிகவும் கவனத்துடன் துடைக்க வேண்டி வரும்.
குறிப்பாக மரத்தாலான தரைகளில் தேக்கு மரம், பைன் மரம் மற்றும் சிவப்பு தேக்கு மரத்தாலான தரைகள் என்றால் அதிகம் கவனம் வேண்டும்.
ஏனெனில், அவை சிறிது பழுதடைந்தாலும், மீண்டும் அதனை சரிசெய்வது மிகவும் கஷ்டமான ஒன்று. எனவே எப்போதும் மரத்தாலான தரையை துடைக்கும் போது, ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதற்கேற்றாற் போல் சுத்தம் செய்ய வேண்டும். சரி, இப்போது அத்தகைய மரத்தாலான தரையை துடைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை என்னவென்று பார்ப்போமா!!!
* புதிதாக மரத்தாலான தரையை வீட்டில் அமைக்கும் போது, அதனை தினமும் துடைக்கக் கூடாது. இல்லையெனில் அந்த தரையானது பொலிவிழந்துவிடும். எனவே புதிதாக பொருத்தியவற்றை பற்றி கார்பெண்டரிடம் கேட்டு, பின்னர் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை டீ அல்லது காபி தரையில் பட்டால், அப்போது ஈரமான துணி கொண்டு உடனே துடைத்துவிட வேண்டும்.
* தரையை துடைக்கும் முன் தூசி மற்றும் குப்பைகளை பெருக்கிவிட வேண்டும். ஏனெனில் குப்பையோடு வீட்டை துடைத்தால், பின் ஈரம் காய்ந்ததும், மீண்டும் அந்த தூசியானது படிந்து அழுக்காக காணப்படும்.
* சரியான துணி மற்றும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். விலை மலிவாக கிடைக்கிறது என்று எந்த ஒரு நீர்மத்தையும் பயன்படுத்திவிட வேண்டாம். மேலும் தரையை துடைக்கப் பயன்படுத்தும் கிளின்சரை நீரில் கலக்கும் போது, சரியான அளவில் கலந்து, பின்னர் துடைக்க வேண்டும்.
* வீட்டின் தரையைத் துடைக்கும் போது, முதலில் ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் காயந்த துணியால் அல்லது மாப்பால் துடைக்க வேண்டும். இதனால் தரையில் தண்ணீர் தேங்காமல் இருக்கும்.
* வீட்டை துடைத்தப் பின்னர், ஈரம் காயாமல் நடக்க வேண்டாம். இல்லையெனில் பாதத்தின் சுவடுகள் தரையில் அப்படியே பதிந்துவிடும். மேலும் தரையை துடைக்கப் பயன்படுத்தும் துணியானது காட்டனாக இருந்தால் சிறந்ததாக இருக்கும்.
இவையே மரத்தாலான தரையைத் துடைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை. மேலும் இவ்வாறு செய்தால், தரையில் எந்த ஒரு அழுக்கும் இல்லாமல், வீடே சுத்தமாக காணப்படும். மேலும் அந்த மரத்தாலான தரையும் நீண்ட நாட்கள் இருக்கும்.