Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 47661 times)

Offline Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #75 on: March 11, 2025, 05:43:16 PM »
மணநூல் ஆகும்

🌹மதுரைக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன?🌹

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #76 on: March 11, 2025, 06:10:01 PM »
மொத்தம் 64 படலங்கள் அமைந்துள்ளன

சிலப்பதிகாரத்தில் மாதவியின் தாய் பெயர் என்ன?

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #77 on: March 11, 2025, 06:22:03 PM »
தமிழ் இலக்கணத்தின் தந்தை யார்?     
                    மறைமலை அடிகள்
                   
                    சிலப்பதிகாரத்தில் மாதவியின் தாய்
                      பெயர்  என்ன?
                         
                       சித்திராபதி

   



அடுத்து.       
🪷 தமிழ் கவிதையின் தந்தை யார்? 🪷

Offline Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #78 on: March 13, 2025, 06:04:30 PM »
பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - திசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.

NEXT🌹நியூ இந்தியா இதழ் ஆசிரியர்🌹

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #79 on: March 15, 2025, 03:39:31 PM »
நியூ இந்தியா என்பது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னி பெசன்ட் என்பவரால் இந்தியாவில் வெளியிடப்பட்ட தினசரி செய்தித்தாள் ஆகும்,




  🪷 வார இதழை வெளியிட்ட பெண் ஆசிரியர் யார்? 🪷

Offline KS Saravanan

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #80 on: May 18, 2025, 08:50:44 PM »
தமிழில் வெளியான முதல் வார இதழை நடத்தி வந்த பெண் ஆசிரியர் தபிதா பாபு ஆவார். 1865 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வெளியான அமிர்தவசனி என்ற இதழின் ஆசிரியராக அவர் பணியாற்றினார். இது தமிழில் வெளியான முதல் மகளிர் இதழாகும். இவ்விதழில் பெண்கள் கல்வி, சுகாதாரம், மற்றும் வாழ்வியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் வெளியானன. கிறிஸ்தவ சமயம் சார்ந்த இதழாக இருந்தாலும், இந்து பெண்களுக்கான தகவல்களையும் வழங்கியது. இது பெண்களுக்காக, பெண்களால் எழுதப்பட்ட முதல் இதழாக கருதப்படுகிறது.!

இந்தியாவின் முதல் முழுநீள சினிமா திரைப்படம் எது..?

Offline Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #81 on: May 20, 2025, 05:45:43 PM »
முதல் முழுநீள இந்திய திரைப்படம் ராஜா ஹரிச்சந்திரா ஒரு அமைதியான திரைப்படம் மற்றும் 1913 இல் வெளியிடப்பட்டது.


NEXT 🌹
உலகின் முதல் புகைப்படம்🌹

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 262
  • Total likes: 609
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #82 on: May 21, 2025, 09:37:44 AM »
உலகின் முதல் புகைப்படம் "லே கிராஸ்" சாளரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி ஆகும், இது 1826 அல்லது 1827 இல் ஜோசப் நிசெஃபோர் நீப்ஸால் பிரான்சின் செயிண்ட்-லூப்-டி-வாரேன்ஸில் எடுக்கப்பட்டது. இது "View from the Window at Le Gras" என்று அழைக்கப்படுகிறது.

Next : தமிழ்நாட்டின் முதல் மருத்துவமனை எங்கு தொடங்கப்பட்டது

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #83 on: May 22, 2025, 02:54:44 PM »
சென்னை அரசுப் பொது மருத்துவமனை



அடுத்து     🪷 தமிழ் இலக்கியத்தின் முதல் நூல் எது? 🪷

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #84 on: May 23, 2025, 08:05:21 AM »
தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் உள்ள பிரிவுகள் யாவை சூத்திரங்கள் எத்தனை ?

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #85 on: May 23, 2025, 05:19:47 PM »
தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம். இதில் சூத்திரங்கள் மொத்தம் 1610 உள்ளன.


அடுத்து   🪷 பகுபதம் என்றால் என்ன? 🪷

Offline Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #86 on: May 24, 2025, 10:37:49 AM »
பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச் சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக் காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்.

NEXT 🌹பகுதி என்றால் என்ன🌹

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #87 on: May 25, 2025, 04:24:21 PM »
பகுதி என்றால், ஒரு சொல்லில், அது தனிச்சொல்லாக இருக்கும்போது, அதன் அடிப்படையான வடிவம் அல்லது முதனிலை என்று சொல்லலாம். ஒரு பகுபதத்தில், பகுதி என்பது அந்தச் சொல்லின் பொருளைத் தரக்கூடிய முதலாவது உறுப்பு.


அடுத்து    🪷 பதவியல் என்றால் என்ன?🪷

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #88 on: June 18, 2025, 03:22:56 PM »
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாவதாக அமைவது பதவியல் ஆகும். இதில் பதம், பகுதி, விகுதி, இடைநிலை, வடமொழியாக்கம் என்ற ஐந்து கூறுகளின் கீழ் மொத்தம் 23 நூற்பாக்கள் (128-150) தரப்பட்டுள்ளன.

Source: Wikipedia



மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள்

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #89 on: June 19, 2025, 10:50:04 PM »
மணிபல்லவம் தீவு



அடுத்து
🪷இரட்டை காப்பியங்கள் எவை ஏன்? 🪷