Author Topic: வாழ்ந்து வீழ்ந்த வீட்டை வாங்கலாமா?  (Read 1528 times)

Offline Global Angel

ஒரு குடும்பம் வாழ்ந்து, வீழ்ந்து போன தங்களுடைய வீட்டை விற்கிறார்கள். அப்படிப்பட்ட வீடுகளை வாங்கலாமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: 4வது வீட்டில் சனியோ அல்லது ராகுவோ இருந்தால் வாங்கலாம். 4வது வீட்டில் ராகு இருந்தாலோ, 4வது வீட்டில் 6க்குரிய கிரகம் இருந்தாலோ, 4வது வீட்டில் 8க்குரிய கிரகம் இருந்தாலோ வாழ்ந்து முடிந்த, இடிந்துபோன வீடுகளையெல்லாம் வாங்கலாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

இதேபோல, 4வது வீட்டில் சனி இருந்தால் அவர்களும் வாங்கலாம். பாதகாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னத்தில் பாதகாதிபதி சனி பகவான். மேஷ லக்னத்தில் 4ல் சனி இருந்தால், வங்கியில் கடன் வாங்கி, அதனை திருப்பிக் கட்ட முடியாமல் ஏலத்திற்கு வரக்கூடிய சொத்துக்களையெல்லாம் வாங்கலாம். இவர்களுக்கெல்லாம் எந்த பாதிப்பும் வராது. பின்னமான சொத்துக்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்