Author Topic: வித்தியாசமான இறால் ப்ரை  (Read 788 times)

Offline kanmani

கடல் உணவான இறாலில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அத்தகைய இறாலை ஏதாவது வித்தியாசமாக மொறுமொறுவென்று சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது இந்த எப்போதும் செய்யும் ப்ரையை விட, சற்று வித்தியாசமான முறையில் ப்ரை செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கூட செய்து சாப்பிடலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

இறால் - 10-20 (சுத்தமாக கழுவியது)
பால் - 1/2 கப் மைதா - 1 கப்
முட்டை - 2-3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காய விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை நன்கு கழுவி, அதோடு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் மைதா, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், இறால் துண்டை எடுத்து, மைதா கலவையில் பிரட்டி, பின் முட்டைக் கலவையில் நனைத்து, இறதியாக பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

 இதேப் போல் அனைத்து இறால் துண்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான இறால் ப்ரை ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.