Author Topic: பட்டாணி குருமா  (Read 901 times)

Offline kanmani

பட்டாணி குருமா
« on: December 08, 2012, 11:21:43 AM »

    பட்டாணி - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    தயிர் - 2 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 4
    சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க
    எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
    மஞ்சள் தூள் - சிறிது
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    உப்பு
    அரைக்க:
    தேங்காய் - 3 துண்டு
    கசகசா - ஒரு தேக்கரண்டி
    முந்திரி - 5

 

 
   

பட்டாணியை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கசகசா, முந்திரியை ஊற வைத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   

வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து குழைய வதக்கவும்.
   

வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். பின் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
   

இத்துடன் தயிர் சேர்த்து கிளறவும். ஒன்றாக சேர்ந்து வந்ததும் நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
   

கொதித்த பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
   

சுவையான பட்டாணி குருமா தயார். இட்லி, தோசை, சாதம், நெய் சாதம், சப்பாத்தி, ஆப்பம் என அனைத்திற்கும் ஏற்றது.