பச்சைமிளகாய் - ஒரு கிலோ தயிர் - 3 கப் உப்பு - தேவைகேற்ப.
பச்சைமிளகாய்களை தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பிறகு அவைகளின் காம்புகளை நீக்கிவிடவும். காம்பு பாகத்தில் லேசாக வாய் திறந்தார்போல் கீறி வைத்துக் கொள்ளவும். நன்கு புளித்த தயிரில் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்து அதனுடன் மிளகாயையும் கலந்து நன்கு குலுக்கி இரண்டு நாட்கள் ஊறவிடவும். இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து வெய்யிலில் உலர்த்தவும். நன்கு உலர்ந்த பின் மீண்டும் எடுத்து தயிரில் போட்டு வைக்கவும். இதே போல் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு செய்து வரவும். இப்போது மிளகாய் வெளுத்து, உப்பு நன்றாகப் பிடித்து காணப்படும். அதன்பிறகு வெய்யிலில் நன்கு காயவைத்து எடுத்து பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.