Author Topic: கடலைப்பருப்பு பாயசம்  (Read 718 times)

Offline kanmani

கடலைப்பருப்பு பாயசம்
« on: November 23, 2012, 11:23:53 PM »
என்னென்ன தேவை?
கடலைப்பருப்பு  250 கிராம்
தேங்காய்  1
வெல்லம்  அரைகிலோ
நெய்  100 கிராம்
முந்திரி, திராட்சை  தேவையான அளவு.


எப்படிச் செய்வது?
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். கடலைப்பருப்பை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி, மூன்று தரத்தில் பால் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றாம் தரப் பாலில் கடலைப்பருப்பைப் போட்டு வேக வையுங்கள். இன்னொரு அடுப்பில் வெல்லத்தை உடைத்துப்
போட்டு பாகு காய்ச்சுங்கள்.

வேக வைத்த கடலைப்பருப்பை இந்த பாகில் போட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். கொதித்துத் திரளும்போது நெய் ஊற்றுங்கள். நெய் நன்கு உருகிக் கலந்ததும், இரண்டாம் தரத் தேங்காய்ப்பாலை ஊற்றி ஓரிரு நிமிடம் கொதிக்கவிட்டு, முதல்தர பாலை ஊற்றி நன்றாக கிளறி, முந்திரி, திராட்சை போட்டு இறக்கி விடுங்கள்.