Author Topic: மாங்காய் ஊறுகாய்  (Read 814 times)

Offline kanmani

மாங்காய் ஊறுகாய்
« on: November 21, 2012, 12:06:28 PM »

    மாங்காய் சிறியது - 4 (அ) பெரியது - ஒன்று
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிது
    உப்பு
    வறுத்து பொடிக்க:
    கடுகு - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - அரை தேக்கரண்டிக்கும் சற்று குறைவு
    சீரகம் - அரை தேக்கரண்டி
    தாளிக்க:
    நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    கடுகு - கால் தேக்கரண்டி
    பெருங்காயம் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது

 

 
   

மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
   

கடுகு, சீரகம், வெந்தயம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து ஆற வைக்கவும்.
   

ஆறியதும் அவற்றைப் பொடியாக்கவும்.
   

பொடித்து வைத்துள்ள தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் மாங்காயுடன் சேர்த்து பிரட்டவும்.
   

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து சூடாக மாங்காயில் சேர்க்கவும்.
   

நன்றாக பிரட்டி எடுத்தால் சுவையான இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய் தயார். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும். நீர் இல்லாத கரண்டியை பயன்படுத்தவும்.