Author Topic: ~ கொசு விரட்டிகளால் ஏற்படும் ஆபத்து !! ~  (Read 624 times)

Offline MysteRy

கொசு விரட்டிகளால் ஏற்படும் ஆபத்து !!



வெயில் காலம் முடிந்து மழைக் காலம் ஆரம்பித்துவிட்டது. கூடவே கொசுக்களின் தொல்லையும் தொடங்கிவிட்டது. பகல், இரவென்று பாராமல் எப்போதும், எங்கேயும் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடி, பல அபாயங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதால், கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்விட், கிரீம் என்று பலதையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கொசுக்களுக்கு எதிரான அரணாக விளங்கும் இவற்றில் பல, ஆபத்துகளையும் அள்ளி வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்களும், ஆய்வாளர்களும். கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்கள், லிக்விட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரசாயனங் களின் அடர்த்தி, இவற்றை நாம் சுவாசிக்கும் அளவு, அறைக்குள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இவற்றால் ஏற்படும் தீங்குகளின் அளவு அமையும். கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆண் குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.
« Last Edit: November 18, 2012, 12:11:15 AM by MysteRy »