Author Topic: கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது  (Read 663 times)

Offline kanmani

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது சிசுவை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கர்ப்பிணிகளின் டயட் தொடர்பாக அமெரிக்காவின் இதாகா நகரில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேரி காடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் ஏழு மாத, எட்டு மாத கர்ப்பிணிகள் 24 பேர் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முட்டையில் உள்ள கோலைன் சத்து 480 மி.கி. அல்லது 930 மி.கி. அளவுக்கு கிடைக்கும் வகையில் தினமும் முட்டை சாப்பிடுமாறு கூறப்பட்டது. பிரசவம் வரை அவர்கள் முட்டை சாப்பிட்டு வந்தனர். ஆய்வின் முடிவில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

eat eggs while pregnant lower child
நிறைய சத்து இருக்கு

ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 125 மி.கி. அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. இதுதவிர புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்

கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. சிசுவின் நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் ரத்தஓட்டம், டென்ஷன், சர்க்கரைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது.

டென்சனை குறைக்கும்

கர்ப்பகால டென்சனை குறைக்க முட்டை உதவுகிறது. முட்டை அதிகம் சாப்பிடுவதால், கார்டிசால் சுரப்பு சீராகிறது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. மேலும் கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் தாய்க்கு நோய்த் தொற்று ஏற்படாமல், வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வராமலும் கோலைன் காப்பாற்றுகிறது.

உயர் ரத்த அழுத்தம்

கர்ப்பிணிகள் தினசரி 480 மில்லிகிராம் கோலைன் எடுத்துக்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே கர்ப்பிணிகள் தினசரி ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் அறிவான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.