Author Topic: ரவா பொங்கல்  (Read 801 times)

Offline kanmani

ரவா பொங்கல்
« on: November 05, 2012, 01:06:09 PM »

    ரவை - ஒரு கப்
    பாசிப்பருப்பு - அரை கப்
    உப்பு
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பிலை
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    நெய் - ஒரு மேசைக்கரண்டி
    முந்திரி - சிறிது
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பெருங்காயம் - சிறிது
    இஞ்சி - ஒரு சிறு துண்டு

 

 
   

ரவையை வாசம் வர வறுக்கவும். பாசிப்பருப்பையும் வறுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
   

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி 2 1/2 கப் நீர் ஊற்றி சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
   

நீர் கொதித்ததும் சிறுந்தீயில் வைத்து ரவையை கொட்டி கைவிடாமல் கலந்து விட்டு மூடி வேக விடவும்.
   

பாசிப்பருப்பை 2 கப் நீர் விட்டு சிறிது உப்பும் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
   

கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளித்து முந்திரி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
   

இப்போது ரவை வெந்ததும் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் தாளித்த மிளகு சீரக கலவை சேர்த்து இன்னும் சிறிது நெய் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
   

சுவையான சுலபமாக செய்ய கூடிய ரவா பொங்கல் தயார்.