மைதா மாவு - 2 டம்ளர்
நெய் - 100 கிராம்
சீனி - அரை டம்ளர்
உப்பு - அரை மேசைக்கரண்டி
திக்காக பிழிந்த தேங்காய் பால் - 3/4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
கீ குக்கீஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்
மைதா, சீனி, உப்பு, நெய் அனைத்தையும் சேர்த்து கிளறவும். அதனுடன் தேங்காய் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சற்று இறுக்கமாக பிசையவும்.
பின் மாவை வளத்து வேண்டிய வடிவங்களில் கட் செய்துக் கொள்ளவும்.
வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கட் செய்து வைத்துள்ள குக்கீஸ் துண்டுகளை போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
சுவையான இன்ஸ்டன்ட் கீ குக்கீஸ் தயார்.