திருமதி. இளவரசி அவர்கள், ஒரு சமையல் போட்டிக்காக முயற்சி செய்த இந்த குறிப்பினை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த காம்பினேஷன் சுவை சூப்பராக இருக்கும் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
ஓட்ஸ் - ஒரு கப்
உருளைக்கிழங்கு மசித்தது - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீனி - 3 கப்
பால் பவுடர் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
முதலில் ஓட்ஸை வெறும் வாணலியில் சிறிது கலர் மாறும் வரை 2 நிமிடம் வறுக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
பின் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் ஈரம் போக வதக்கி பொடிக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மிக்ஸியில் மசிக்கவும்.
ஓட்ஸ், தேங்காய் துருவல், உருளைக்கிழங்கு, சீனி இவற்றை நன்றாக கலந்து மைக்ரோமீடியமில் 10 நிமிடம் வைக்கவும். இடையிடையே கலந்து விடவும். ஓரளவிற்கு கலந்து வெந்ததும் இதனுடன் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் மைக்ரோ மீடியமில் வைக்கவும்
ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டவும்