பால் - 3 கப்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கு
மசாலா பால் பவுடர் - தேவைக்கு
மசாலா பால் பவுடர் செய்ய:
பாதாம் - 2
பிஸ்தா - 2
முந்திரி - 2
ஏலக்காய் - ஒன்று
பட்டை - சிறுத் துண்டு
லவங்கம் - ஒன்று
மிளகு - 5
சுக்கு - சிறுத் துண்டு
3 கப் பாலை காய்ச்சவும்.
இதில் தேவையான சர்க்கரை சேர்த்து ஒரு கப்பாக குறையும் வரை சிறுந்தீயில் காய்ச்சவும்.
வெது வெதுப்பாக ஆகும் வரை ஆற விட்டு வடிகட்டவும்.
இதில் தயிர் சேர்த்து கலந்து விடவும். மிஷ்டி தோய் செய்ய போகும் கப்பில் பால் கலவை ஊற்றி அதை அப்படியே இரவு முழுக்க தோய விடவும்.
மசாலா பவுடர் செய்ய மிக்சியில் தேவையான பொருட்கள் சேர்த்து அரைக்கவும்.
இப்போது தோய்ந்து இருக்கும் இனிப்பான தயிரை 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து அதன் மேல் இந்த தூளை தூவி பரிமாறவும். சுவையான மிஷ்டி தோய் தயார்.
மிஷ்டி தோய் (Mishti doi) என்பது பெங்காலி உணவு. மிஷ்டி என்றால் இனிப்பு, தோய் என்றால் தயிர். இதிலும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து செய்யலாம். அப்படி கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து காய்ச்சினால் சர்க்கரை சேர்க்க தேவை இல்லை. சர்க்கரை சேர்க்கும் போது பிரவுன் சர்க்கரையும் சேர்க்கலாம். இது தயிருக்கு நல்ல கலர் கொடுக்கும்.