Author Topic: வீட் குக்கீஸ்  (Read 824 times)

Offline kanmani

வீட் குக்கீஸ்
« on: November 05, 2012, 12:04:02 PM »


    கோதுமை மாவு - இரண்டு கப்
    சர்க்கரை - ஒரு கப்
    வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    பால் - ஒரு டம்ளர்
    பாதாம் - தேவைக்கு (ஸ்லைஸ் செய்தது )
    ஏலக்காய் - ஒன்று (பொடி செய்தது )

 

 
   

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
   

பிறகு கோதுமை மாவு, சர்க்கரை, பாதாம், ஏலக்காய் பொடி நான்கையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
   

இந்த கலவையுடன் வெண்ணெய் முதலிலும், பின்பு பாலையும் சேர்த்து படத்தில் காட்டிய பதத்தில் கொஞ்சம் கெட்டியாக அதே சமயம் கையில் ஒட்டாதவாறு பிசையவும்.
   

அரை மணி நேரம் கழித்து கலவையை அச்சில் வைத்து, அந்த வடிவத்தை அவன் ட்ரேயில் பாயில் பேப்பர் விரித்து வைக்கவும்.
   

பின் ட்ரேயை அவனில் 350 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும். அல்லது அவரவர் அவனுக்கு தகுந்தாற் போல செய்யலாம்.
   

குக்கீஸ் தயாரானதும் அதற்கான மணம் ( ஃப்ளேவர் ) நன்றாக வரும். அப்போது வெளியே எடுத்தால் சுவையான குக்கீஸ் ரெடி.

 

இந்த குக்கீஸ் முழுவதும் கோதுமையால் ஆனாது சத்து நிறைந்த ஒன்று. முட்டை விரும்பாதவர்கள் இம்முறைப்படி செய்யலாம். காபி, டீயுடன் சாப்பிட நல்ல ஒரு ஸ்நாக்ஸ். இரண்டு கப் சர்க்கரை போட்டால் தனியாக சாப்பிட நன்றாக இருக்கும்.