Author Topic: படித்ததில் பிடித்தது ...  (Read 839 times)

Offline Global Angel

படித்ததில் பிடித்தது ...
« on: November 03, 2012, 09:35:16 PM »
அஹிம்சையை இம்சை என நினைக்கலாமா.. அப்படி நினைத்தால் அதற்கு மாற்றுவழி உண்டா...?

புத்தர், அஹிம்சையை இம்சை என நினைத்ததில்லை.. அஹிம்சை, காந்தி வழி தோன்றுதல் என்று பல பேர் நினைப்பதால் காந்தியை பிடிக்கததால் அஹிம்சையும் எனக்கு பிடிக்காது என்பதுபோல் ஆகிவிட்டது. பலபேருக்கு திருடியவனை பிடிக்கவில்லை என்றால் திருடப்பட்ட பொருளும் பிடிக்காமல் போகுகிறது.  பயன்படுத்தும் பொருளை யாரும் பயன்படுத்தலாம்..திருடன் பயன்படுத்தியதால் அது திருட்டு பொருள் ஆகாது...அறிவாளியிடம் இருந்துதான் முட்டாள் பாடம் கற்கவேண்டும்...முட்டாளிடம் கற்றால் அவன் மேலும் முட்டளாவான்...எதிர்தாக்குதளைவிட தற்காப்பு தாக்குதல் உகந்தது...இதில் வன்முறை தவிர்த்து அஹிம்சையும் உட்பட்டே இருக்கிறது. ஆனால் நமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள சூழ்ச்சி, பொறுத்திருந்து எப்பவும் எழுந்திருக்கமுடியாத தாக்குதல், தொலைநோக்கோடு எவற்றையும் அலசுதல், எதிரிக்கு மறைமுகமாக  இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குதல், தேவைக்காக எதிரியும் நண்பனாக்கி கொள்ளுதல்...இவையெல்லாம் நம் எதை பெறவேண்டும் என்று சுயதேவை பொறுத்தே அமையவேண்டும். பழைய கருத்துகளும் பழையதாகவே இருக்கும் அந்த சூழ்நிலைக்கு அது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால்  நடைமுறை சூழலுக்கு எவை பொருந்த குடியது என்பதை அறியவேண்டும். ஏற்கனவே புரட்சில்  நடந்ததை தொடர்வதைவிட புதியதை கைக்கொள்ளவேண்டும். பலது பெறவேண்டுமானால் சில வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவது நல்லது என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பலது உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்  இருக்கலாம்..." எதையும் மாற்றி யோசி..." என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.


மனம் எங்கே இறுகிய நிலைக்கு தள்ளபடுகிறது...?

போராட்டம், புரட்சி என்றாலே அங்கே மனம் ஒரு இறுகிய நிலைக்கே தள்ளபடுகிறது... பிறர் புன்னைகைக்காக தன் புன்னகை வெறும் செல்லா காசாகிறது....அப்படியும் புன்னகைத்தால் அப்புன்னகையில் அன்பைவிட அனல்தான் தெறிக்கிறது.


மனம் இரண்டுபக்கத்தை பார்க்குமா...?

இயல்பில் எல்லாமே ஏற்ககுடியதுதான் எரிச்சல் பட எதுவுமில்லை...எதுவும் எரிச்சலாக இருந்தால் உலகில் படைக்கப்பட்டது படைக்கபடாமலே போயிருக்கும். அன்பு ஏதுபோல உள்ளதோ அதுபோல்தான் கோவமும்...இரண்டும் வேற வேற பக்கங்கள்..ஒருபக்கத்தை பார்க்கும் மனசு மறுபக்கத்தை மறுக்கிறது...என் மனம் எதையும் ஏற்கும் நிலையில்தான் இருக்கிறது...விருப்பு ஏதோ போலவோ அதுபோல் பிறர் என் மேல் காட்டும் வெறுப்பையும்...


எந்த பணி வேகமானது, விவேகமானது...?

கலபணியை விட எழுத்து பணி ரொம்ப விவேகமானது...ரொம்ப வேகமானது. காரல் மார்க்ஸ் எந்த போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேடுத்துகொண்டார். ஆனால் அவரின் மூலதன எழுத்துகள் ஒரு பெரிய முதலாளித்துவ சாம்ராஜியத்தையே...புரங்காட்ட ஓட செய்தது இன்னும் இதன் எதிரே நிற்க தைரியம் இல்லாமல்தான் அது இருக்கிறது. இவை எப்படி ஏற்பட்டது உங்களுக்கு தெரியாததா..ஒரு அரசு கல்விக்காக செலவிடும் பணம் லாபம் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால் அக்கல்வி கொடுப்பதால் அவ்வரசுக்கு எதுமாதிரி பயன்கள் அமையும் எனபது உங்களுக்கும் தெரியும். இதில் அக்கல்விக்கு செலவிடும் பணம் விரையம் என்றால் பின் அவ்வரசு லாபல் எப்படி ஈட்டுவது....


நாம் பார்க்கும் பார்வை எத்தகையது...?

நாம் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வை வித்தியாசமகத்தான் இருக்கிறது போல..."மலரை, பெண்கள் கண்டால் அவர்களுக்கு சூடிக்கொள்ள ஆசைவரும், என்போன்றவர்கள் கண்டால் பார்த்து ரசிக்க ஆவல் வரும், கவிஞ்சர்களிடம் கண்டால் கவிதையாய் வரும் , ஓவியன் கண்டால் ஓவியம் வரும், பையத்தியகாரன் கண்டால் கசங்கிவிடும்....


உளவியல் முலமாக பிரச்சனையை அனுகலாகமா...?


எந்த பிரச்சனையும் மேலோட்டமாக ஆராயும்போது அதற்கு தற்காலிக தீர்வுதான் கிடைக்கும் ஆனால் அதன் பிரச்சனையின் புகைச்சல் எப்போதும் இருக்கத்தான் செய்யும்....அதே அப்பிரச்சனையை உளவியல் பூர்வமாக ஆராயும் போது பிரச்சனையின் அடிவேர்வரை சென்று தீர்க்கலாம்...இது ஒரு நிரந்தர தீர்வாக கூட அமையும்...ஆனால் நம் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தற்காலிக... தீர்வுதான் நிரந்தர தீர்வாய் இருக்கிறது. மாற்றபடுகிறது ...நாம் வாழும் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் உளவியல் பூர்வமாக அணுகினால் நம் மனம் சார்ந்த பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கலாம்....இதில் நான் பிரச்சனைகளை எப்போதும் கொஞ்சம் அழமாகதான் பார்ப்பேன். பிறர் பிரச்சனை எனக்கு ஏற்பட்டால் அதன் விரியம் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் அணுகுவேன். இது எனக்கு கசப்பான நிலையிளும் நல்ல அனுவத்தை தரும். அதனால் "உளவியல் பூர்வமாக" என்ற வார்த்தை வாழ்கைக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது...நீங்களும் முயற்சிசெய்யலாம்....! என் குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றாலும் நான் என் குழந்தை நிலையில் இருந்ததுதான் பார்பேன்....குழந்தையின் வயதுக்கு அவன் நிலைக்கு சென்றுதான் பார்பேன்...பார்க்கவேண்டும்...


எவை சமுகத்தில் மாற்றத்தை கொண்டுவரும்...?

"எதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைகள்தான் சமுகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்..."இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.


பெண்கள் அலங்காரத்தி துறந்துதான் வாழவேண்டுமா...?


ஆண்களின் அடிமை மனப்பான்மை நீங்கவேண்டும் என்பதற்காக பெண்கள் அவர்களுக்கு பிடித்த அலங்காரத்தை  துறந்து  ஆண்கள் மாதிரி ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று நினைக்கிறன். இதில் பெண்கள் பற்றிய  பெரியார் கருத்துக்கும், உங்கள் கருத்துக்கும் எனக்கு  உடன்படவில்லை...பெண்கள் பெண்களாய் இருக்கலாம். அவள் ஆணை சார்ந்திருக்காமல் இருக்கலாம் ஆண்களுக்கு நிகரான சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒரு பெண் இப்படி இருக்க விரும்பினால் அப்படி இருக்க அவளை அனுமதிக்கலாம் இதில் ஆணிடம் அனுமதி பெறகூட தேவையில்லை அவளே அவள் வாழ்வை தேர்ந்தேடுத்துகலாம்....இதில்லாமல் ஆண்கள் மனோபாவம் மாறவேண்டும் என்று நினைத்து ஆண்கள் மாதிரி இருக்கவேண்டும் நினைத்தால் இதில்  பாலினமே மாறிவிடும்....ஏதோ ஒரு பழமொழி சொல்வார்கள் கிணறு வெட்டபோய் பூதம் கிளம்பினதுபோல....

பெண்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் கோவபடமாடிங்கனா ஓஷோவின் கருத்தை மேற்கொள்காட்டுகிறேன்:

"பெண்கள் சிகரெட் பிடிப்பதை என் கண்ணால் நம்பவே முடிவதில்லை....ஆண்கள் செய்வதையே பெண்கள் செய்தால் இதன் எதிர்விளைவு உலகத்தில் எப்படி அமையும்.. மோசமாகத்தான் இருக்கும். ஆண்கள்தான் அறிவு கெட்டவன் தன் தவறை மெல்ல மெல்ல உணர்ந்து, திருந்தி கொண்டிருக்கிறான். அப்போதும், இப்போதும்  அவன் செய்த  தவறுகளையே பெண்களும் செய்தால் இது வேறு ஒரு  மாதிரி அமைந்துவிடும். இவள் அடுத்து என்ன செய்வாள் ஆண்கள் மாதிரி நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கபோறால... " இப்படி சொல்வதால் ஓஷோவுக்கு  பெண்களைபற்றிய மதிப்பீடு தவறாக கொள்ளவேண்டாம். "பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்"  என்ற தலைப்பில் முழுக்க, முழுக்க ஆணிடம் இருந்து பெண்கள் விடுதலைகளை மற்றும் அவளின் பெருமைகளை பற்றியே  சொல்லிருக்கிறார். இப்புத்தகம் சென்னையில் உள்ள கவிதா பதிப்பகத்தில் கிடைகிறது. 


நாத்திகம் யாருக்கு சொந்தமானது...?

நாத்திகம் எனபது பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல அது புத்தர் காலத்தின் முன்பிருந்தே வருகிறது...எல்லார் மனதிலும் ஏற்புடையது, விருப்பமில்லாதது என்று ஒவ்வொன்று  உள்ளது. நம் மனது ஏற்பதை கேள்வி கேட்காமல் எதையும் எளிதாக ஏற்கும் ஆனால் விருபம்மில்லாதது  சிலதை மட்டும் மனது வெறுக்கும். அவ்வெறுப்பு அறிவின் துணைகொண்டு  சிந்தனையுடன்  இருந்தால் அது நியாமானதே அதை விடுத்து நாத்திகம் உட்பட எல்லாத்தையும் வெறுத்தால் அது ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருந்தால் சிந்தனை எங்கோ தடைபட்டுவிட்டது என்று பொருளாகும்...


வரலாற்று நாயகர்கள் சாதனைகள் எவ்வாறு...?

வரலாற்று சாதனையாளர்கள் உடலில் வீசும் வியர்வை கூட சந்தன மணமாக கூட மாறும் போல....இலங்கையில் புத்தம் கூறியதை விட்டுவிட்டு புத்தரின் பல்லை பாதுகாப்பதுபோல்...எல்லாமே பாதுகாக்கபடவேண்டியதாகிறது...


உலகத்தில் கண்டுபிடிப்பு எல்லாம் எப்படி கண்டுபிடிக்கபட்டது.....?

ஒரு நிகழ்வின் உண்டாகும் அனுபவம், அறிவு தேடுதலின் அடுத்த நகர்வு...ஆர்வம், எளிமை படுத்தவேண்டும் என்ற வழிமுறை பின் லாப நோக்கம் இதன் அடிப்படையில் பல கண்டுபிடிப்புகள் உருவாயின...ஆனால் எல்லோரும் கண்டுபிடிபளாராய் இருப்பதில்லை ஒரு சிலரே மாறுகிறார்கள் மாற்றிகொள்கிறார்கள். இருள் அடைந்த பொழுதை நி...த்தமும் கண்டு எடிசனின் கண்டுபிடிப்பு அமைந்தது.


யார் நாளைய சரித்திர நாயகன்....?

உங்களால் முடியாது என்று விட்டதை உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒருவன் முயற்சித்து கொண்டிருப்பான். அவனே நாளை சரித்திர நாயகனாகிறான்.
                    

Offline Global Angel

Re: படித்ததில் பிடித்தது ...
« Reply #1 on: November 03, 2012, 09:41:34 PM »
நம் தமிழ் மொழியில் நிறைவு பெற்ற நிலை உள்ளதா...?

இது தமிழ் மொழியில மட்டும் இல்லை எல்லா மொழியிலும் நிறைவு எனபது இல்லை மற்ற மொழி அப்படியெல்லாம் இல்லையென்று நாம் மறுந்தாலும் அப்படிதான்  "உள்ளூர் மாடு வெளியூர் சந்தையில்தான் அதிக விலை போகும்....." எதுவும் நம் அருகில்  இருக்கும் போது அதன் அருமை தெரியாது அது தொலைவில் இருக்கும் போதுதான் அதனை நினைத்து ஏங்கும் மனம்.....இவை மொழிக்கும் பொருந்தும் இது மொழியுணர்வு சார்ந்தது என்று சொல்வதைவிட மனஉணர்வு சார்ந்தது என்று நினைக்கலாம். நம் தாய் படிக்கவில்லையே என்பதற்காக அவளை மாற்றாந்தாய்யாக்க முடியுமா...இவள் பெற்ற மக்கள் படிக்கவில்லை, தெரியவில்லை என்றாலும் நம் தாய் இவள் அல்லவா அதுவும் நமக்கு தமிழ் பாலூட்டிய தமிழ்தாய் அல்லவா... அவளை பழிக்கலாமா...மாற்றம் எனபது மாறாமல் இருப்பது...இதுவும் கடந்துபோகும்...தமிழ் மொழியின் நிறைகளை பாராட்டி குறைகளை சுட்டிகாட்டினால் தமிழ் மொழின் குறையும் கடந்துபோகும்....எல்லாம் நிறைவடைந்த சமுதாயம் எனபது உலகத்தில் எதுவும் இல்லை


வருடத்தின் கொண்டாட ஒவ்வொரு தினம் வருகிறது இவை எதற்கு....?

உலகத்தில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தினம் வைக்கலாம் போல.அம்மக்கள் தினம் ஒன்று உள்ளது. எல்லா அம்மாவுக்கும் வாழ்த்து சொல்லணும் என்று இருக்கும். எனக்கு தெரிஞ்ச ஒருவர் அவர் அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல சென்றார் முதியார் இல்லம் நோக்கி ...! இப்படிதான் இருக்கிறது வருடத்தின் பல பல தினங்கள்...அதுபோல புத்தாண்டு தினம் 12 மணி வரவரைக்கும் மக்களுக்கு ஒரே சந்தோசம் எல்லோருக்கும் ஏதோ புது உலகில் நுழைந்தது போல பிரம்மை ஒரே ஆட்டம், பாட்டம்தான் அந்த ஒரு நாள் மட்டும் சென்று வருடம் பூராவும் அவர்கள் களையிழந்து இருப்பாங்க.. இது போன்ற கலையிழந்த தினங்களெல்லாம் நமக்கு தேவையா...?


நம்மை காப்பாத்துமா கடவுள்...?

பலர் என்னை காப்பது என்று கடவுள் கிட்ட முறையிடுவாங்க இதில் அந்த  சாமி எப்படி காப்பாத்தும் அதுக்கே பாதுகாப்பு இல்லாமல்தான் கதவு அதுக்கொரு பூட்டு, சாமி சேத்து வச்சிருக்கும் உண்டியலுக்கு ஒரு பூட்டு, பின்பு கோவில் பாதுகாப்புக்கு ஒரு காவலாளி என்று சாமி பயத்துடனே இருக்க  அதுகிட்ட போய் ஆத்தா மகமாயி என்ன காப்பாத்து என்று கத்தி கதரனா எப்படி ஆத்தா வருவா, அருள் தருவா...


பலபேர் குற்றத்தின் பார்வை எது மாதிரி...?

ஒரு குற்றம் வெளி உலகத்திற்கு தெரியாதவரை அது ஒரு குற்றமாக தெரியாது. அந்த குற்றம் தன நண்பர்களிடம் சொல்லும்போது நண்பர்கள் சொல்லுவார்கள் நீ கில்லாடிடா....உன் திறமை உனக்குத்தான் என்று சொல்லுவாங்க...அதே அவன் மாட்டிகினா கில்லாடி என்று சொன்ன நண்பர்கள் பார்வை அவனை வேறுவிதமாக பார்ப்பார்கள் எனக்கு அப்பவே தெரியும் இவன் எப்படியும் மாட்டிப்பான் என்று சொல்லுவாங்க...         


மனித உறவுகளை கட்டுபடுத்துவது நல்லதா....?

மனித உறவுகளை ஏன் கட்டுபடுத்தவேண்டும்...முதலில் மனித உறவு எனபது எதை மையபடுத்தி இயங்குகின்றது. உறவுகளை சமூக சுழலளிலும், குடும்ப சுழலளிலும் கட்டுபடுத்தலாம் ஆனால் மனித மனங்களை யார் கட்டுபடுத்துவது. கட்டுப்பாடு என்பதே கட்டுபோடுவதுதானே...  கணவனுக்கு மனைவியை மறைமுகமாக கட்டிபோடுவது.... சட்டம் என்ற பொய்மையை காட்டி மக்களை கட்டிபோடுவது இவையாவும் கட்டுபடுத்துதல் என்ற விதியின் கிழ்தானே வருகிறது. காதலன், காதலியாய் இருக்கும் வரை காதல் உறவில் கட்டுபடுத்துதல் இல்லை ஆனால் கல்யாண உறவில் கட்டுபடுத்துதால்தான் மேலோங்கி இருக்கிறது. ஆதலால் கட்டுபாடுகள் இல்லாத மனித உறவுகள்தான் சாத்தியமானது. முதலில் மனிதன் என்பவன் சுதந்திர உணர்வு கொண்டவன். அவனுடைய பேச்சு, சிந்தனை, கருத்து எல்லாம் சுதந்திரம் மிக்கவை. ஆட்டு மந்தைபோல் பின் செல்பவனால் எந்த முன்னேறத்தையும் சமுகம் காணமுடியாது. சுதந்திர உணர்வு கொண்டு தனித்து இயங்குபவனாலே மாற்று கருத்தை சொல்லமுடியும். என் அப்பன் எனக்கு நுழைவதற்கு  வாசற்படிதான். அதில் நுழைந்து வெளி உலகை கண்டு அனுபவித்தது என் உயிர் தன்மை அது எதையும் கட்டுபடுத்துவதில்லை பார்க்கும் இயற்கையே நானாகி போகும் போது இதில் எதை கட்டுபடுத்துவது, எவற்றை கட்டுபடுத்துவது....


நமக்கு யார் உதவி புரிகிறார்கள்...?

புகழ்பவனை விட இகழ்பவன்தான் நமக்கு உதவி புரிகிறான். நம் சிந்தனையை சீண்டி விடுகிறான். சொற்களை வாங்குகிறான். "மலர்ப்பாதையில் நடபதைவிட மலைபாதையில் நடப்பது புதிரானது, புரட்சிமிக்கது."விமர்சனம் செய்பவர்களுக்கு விளக்கம் போதவில்லை என்றால் நாம்... விலகிவிடலாம்....அஞ்சவேண்டியதில்லை. 


மனிதர்கள் அன்பை எப்படி பார்கிறார்கள்....?

எல்லா உயிரினத்திர்க்கும் அன்பு பொதுவானதுதான்...அது முழுமையாக வெளிப்படும்போதுதான் அதன் அழகே வெளிபடுகிறது.  மனிதர்கள் அன்பை பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்து பார்கின்றனர்.   


நம்மிடம் கேள்விகள் எப்படி வரும்......?

"கேள்விகள் கேட்கும்போதுதான் தேடுதல் தொடங்குகிறது" அதுவரை மனது எதாவது வெந்தது வேகாததை அசைபோட்டுக்கொண்டுதான்  இருக்கும். கேள்வின்னு வரும் போதுதான் சிந்தனை மனத்தால் துண்டபடுகிறது...


மரணம் எப்படி நிகழும்.....?

உடலில் தினமும் ஆயிரகனக்கான செல்கள் சாகின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன. உடலறுவு கொள்ளும்போது விந்து வெளியேற்றத்தில் சாகிறோம் அங்கு ஆற்றல் இழந்து விருப்பு, வெறுபற்ற நிலையில்  வெறுமையாகிறோம் அது ஒரு மரணத்திற்கு ஒப்பானது...மரணம் எனபது உடலில் இயக்கப்படும் ஆற்றல் நின்றுபோதல். என கொள்ளலாம்... இன்னும் இதை சிறப்பித்து கூறவேண்டும் என்றால்....ஒருவருக்கு மரணம் நிகழ்வது....மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுவது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது விழுவது மரமும் அறியாது, இலையும் அறியாது....மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி விழும்....மரண காயத்தை ஏற்படுத்தாமல்...!                         


கசப்பான நிகழ்வுகளை மறகடிகலாமா....?

நடக்கும் நிகழ்வின் முலம் உண்டாகும்  உணர்சிகளை விழிப்புணர்வுடன் உன்னிப்பாக பார்த்தாலே... மரத்து போவதற்கு பதில் அது இல்லாமலே போகும் அதையும் தாண்டிபோகும் இதற்கு எந்த  செயளையும்  விழிப்புடன் பார்க்கும் பயிற்சி வேண்டும்....நம் இன்பத்திற்கும்,  துன்பத்திற்கும் நூலிழை வித்தியாசம்தான்... கஷ்டம் என்று சொல்ற வேலையும் சுயதேவையான வேலையாக கூட மாற்றலாம்...சிலபேருக்கு படிக்கட்டு ஏறுவதற்கே சிரமம் என்பார்கள் அதையே உடலுக்கு தேவையான பயிற்சி என்று நினைத்தால் துன்பம் எனபது தேவையான இன்பமாக மாறும்...


மனம் எதன் அடிப்படையில் இருக்கிறது.....?

உணர்வுகளில் உண்டாகும் உணர்சிகள் எல்லாமே மனம் சார்ந்தே வருகிறது...மனம் எண்ணத்தை தாங்கி நிற்கிறது எண்ணம் எனபது நடந்தது, நடகின்றது, நடப்பது இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது.... எண்ணத்தை விழிப்புடன் கவனித்தாலே எல்லாமே அடங்கிவிடும்....வேதனை உண்டாக்கும் உணர்ச்சியும் ஒரு கனவுபோல் வந்து மறைந்துவிடும் அது எந்த காயத்தையும் ஏற்படுத்தாமல் சென்றுவிடும்....எதையும் பயிற்சி மூலமே சாத்தியம் அதற்கு பொறுமை ரொம்ப முக்கியம் சகிப்பு தன்மையும் வேண்டும்...நடிகர் கமஹாசன் கூறியது: "ஒத்திகை இல்லாத நாடகமும்; பயிற்சி இல்லாத போரும் கேளிக்குத்தாகும்" எதுவும் எளிமையாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போகும்...