மைதா - அரை கிலோ
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு கப்
முட்டை - ஒன்று + மஞ்சள் கரு 2
உப்பு - ஒரு தேக்கரண்டி
ட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
வெது வெதுப்பான தண்ணீர் - கால் கப்
ஃபில்லிங் செய்ய:
மட்டன் கைமா - 50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - 3
கேரட் - 2
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
மைதாவில் 2 மேசைக்கரண்டி வெண்ணெயை உருக்கி ஊற்றி, ஆலிவ் ஆயில், பால், முட்டை, உப்பு போட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் ட்ரை ஈஸ்ட் கலந்து ஊற்றி பிசைந்து வைக்கவும். மாவை நன்கு முடி சூடான இடத்தில் நான்கு மணி நேரம் வைக்கவும். நான்கு மணி நேரத்திற்கு பின் இரு மடங்காக ஆகி இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
உருளைக்கிழங்கு, கேரட்டை உப்பு சேர்த்து வேக விட்டு நறுக்கி வைக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, நறுக்கிய உருளைகிழங்கு, கேரட்டை சேர்த்து கைமா கலவையில் கலந்து பிரட்டி வைக்கவும்.
மாவை உருண்டை போட்டு சமதளத்தில் வைத்து சற்று கனமாக வளர்த்து, பரவலாக ஃபில்லிங் வைக்கவும்.
அதை அப்படியே உருட்டி மூடவும்.
பின் அதை சமமாக படத்தில் உள்ளது போல் வெட்டவும்.
அவன் ட்ரேயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெயை தடவி, ரோல்ஸ்சை அடுக்கி மஞ்சள் கரு கொண்டு பிரஷ் செய்யவும். அவனை மூற்சூடு படுத்தவும்.180 டிகிரி சூட்டில் 30 நிமிடம் வரை அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
சுவையான ரோல் ஃபப்ஸ் ரெடி.