மாங்காய் துருவல் - 2 கப்
மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
உப்பு
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
மாங்காயை துருவி தயாராக வைக்கவும்.
கால் தேக்கரண்டி கடுகு, வெந்தயம் இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதம் உள்ள கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதில் துருவிய மாங்காய் சேர்த்து சிறுந்தீயில் வதக்கவும்.
மாங்காய் லேசாக வதங்கியதும் தூள் வகை எல்லாம் சேர்த்து வதக்கவும். சிறுந்தீயிலேயே தொடர்ந்து வதக்க வேண்டும்.
எண்ணெய் பிரியும் போது கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
சுவையான மாங்காய் தொக்கு ஊறுகாய் தயார்.
கடுகு, வெந்தயம் இரண்டும் வறுப்படாமல் இருந்தாலும் சரி, அதிகமாக வறுப்பட்டு விட்டாலும் சரி கசந்து போகும். பதமாக வறுத்து எடுத்து பொடிக்க வேண்டும். மாங்காயின் புளிப்புக்கு ஏற்றபடி உப்பும், காரமும் அளவு மாறுபடும். பார்த்து சேர்க்கவும். ஊறுகாயில் எப்போதும் ஈரம் இல்லாத கரண்டியே பயன்படுத்த வேண்டும். சூடான எண்ணெயை மேலே விட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். நான் கொஞ்சமாக செய்து உடனே செலவு செய்ய செய்ததால் எண்ணெய் அதிகம் விடவில்லை. விரும்பினால் காற்று புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம்.