Author Topic: திகில் கதை  (Read 1324 times)

Offline Dong லீ

திகில் கதை
« on: September 27, 2012, 01:12:50 AM »
பாழடைந்த வீடு
பழுதான அறை
எங்கும் திகிலூட்டும்   இருள்

ஓநாய்களின் அலறல்கள்
வவ்வாள்களின் கதறல்கள்
உடம்பில் உதறல்கள்

இதயம் துடிக்கும் வேகத்தில்
இருக்கும் இடத்தை விட்டு  நழுவி
கீழே சென்று பாதம் வழியே
வெளியே குதித்து விடுமோ

அல்லது
மேலே சென்று
தலையில் மோதி
தற்கொலை செய்து விடுமோ

பயம் குரல்வளையை
பதம் பார்த்தது

காற்றும் தன் பங்குக்கு  திகிலாய்
பின்னணி இசை அமைக்க
எங்கும் அமைதி பரவியது

அருகில் யாரோ
நிற்பதாய் உடல் உணர

வியர்வை துளிகள்
என்னை சூழ்ந்து கொள்ள

சில நொடிகள்
அசைவுகள் இன்றி
நான் ...

திடீரென என் கையில்
வேறு ஒரு கை பட
மூர்ச்சையாகி
விழுந்தேன்

காலையில் கண்  விழிக்க
கைகளில் ஏதோ மாற்றம்

உள்ளங்கையில்
முத்த சுவடு
அழியாமல் ...

ஆனால் அது உதட்டு சாயம் அல்ல
இரத்த  முத்தம்..

பேய் தன் காதலை
என்னிடம் சொல்லியிருகிறது
வாயில் ரத்தம் ஒழுக
முத்தமிட்டு  ...

மனிதர் உணர்ந்து  கொள்ள இது மனிதர் காதல் அல்ல
« Last Edit: September 27, 2012, 01:39:00 AM by Dong லீ »

Offline Global Angel

Re: திகில் கதை
« Reply #1 on: September 27, 2012, 01:28:10 AM »
ஹஹஹா .. மச்சான் சந்தம் கொஞ்சம் உன் வசமாகுது இன்னும் ட்ரை பண்ணு ... பேய் காதல் பேய்தனமா இருக்குடா..  பார்த்து மச்சான் பார்த்து பேய்க்கு வாக்க பட்டா புளியமரம் போகலாம்  ;Dபிரவசவ ரூம் போக முடியாது  ::).. பிறர் சவ ரூம்  ( பிரேத அரை ) போகலாம்  ???.. ஹஹா நினச்சு நினச்சு சிரிச்சேன் ... நீ பேயான கதைய ... ஹஹஹாஹ் வார்த்தை கோர்புக்கள் உனக்கு வருது அருமையா ... இன்னும் நிறைய எழுதுடா .. அப்போ இன்னும் நிறைய பரிட்சயம் வரும் ... பேய்க்கு வாக்கப்பட போறவனே  ;D ;D ;D ;D ;D ;D ;D
                    

Offline Anu

Re: திகில் கதை
« Reply #2 on: September 27, 2012, 06:51:20 AM »

காலையில் கண்  விழிக்க
கைகளில் ஏதோ மாற்றம்

உள்ளங்கையில்
முத்த சுவடு
அழியாமல் ...

ஆனால் அது உதட்டு சாயம் அல்ல
இரத்த  முத்தம்..

பேய் தன் காதலை
என்னிடம் சொல்லியிருகிறது
வாயில் ரத்தம் ஒழுக
முத்தமிட்டு  ...

மனிதர் உணர்ந்து  கொள்ள இது மனிதர் காதல் அல்ல
[/quote]

haha sri. nalla thaane poitu irundadhu..
nice kavithai.

« Last Edit: September 27, 2012, 07:52:54 AM by Anu »


Offline Gotham

Re: திகில் கதை
« Reply #3 on: September 27, 2012, 07:45:25 AM »
அண்ணே.. ஹாஹா

வெறித்தனமான பேய்க்காதல்ன்னா இதுவா?

தனியா போய் ஏன் அங்க மாட்டினீங்க? ஒரு சந்தேகம் எல்லா பேய்களும் மோகினி மாதிரி வேசம் போட்டு தானே காதலில் வீழ்த்தும். இப்படி இரத்த முத்தமா கொடுத்தா எப்படி கிடைப்பான் பேய் காதலன்?

கவிதையாவே கதைகள் நிறைய சொல்றீங்க.

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: திகில் கதை
« Reply #4 on: September 27, 2012, 02:13:15 PM »
நல்ல இருக்கு லீ

வித்யாசமா எழுதனும்னு யோசிக்கிறீங்க பாருங்க அதுவே உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய்டும்

தன் மெய்வறுத்த கூலி தரும் நு சும்மாவா சொன்னான் ஐயன்

வாழ்த்துக்கள்
அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: திகில் கதை
« Reply #5 on: September 27, 2012, 07:07:54 PM »
நடு ராத்திரி வரை முழிச்சு இருந்த இப்படி எல்லாம் எழுத தோணுமோ?

நல்லா இருக்கே  :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: திகில் கதை
« Reply #6 on: September 27, 2012, 07:09:30 PM »
ஆனால் அது உதட்டு சாயம் அல்ல
இரத்த  முத்தம்..

பேய் தன் காதலை
என்னிடம் சொல்லியிருகிறது
வாயில் ரத்தம் ஒழுக
முத்தமிட்டு  ...

மனிதர் உணர்ந்து  கொள்ள இது மனிதர் காதல் அல்ல

அண்ணா தேறிட்ட நல்ல தான் இருக்கு ஒரு சின்ன வருத்தம் தான் எதுவும் சிக்லன்னு பேய்க்கு வாழ்க்கை  கொடுத்துடாதே அண்ணா அப்புறம் மாஸ்டர் உனக்கு புளிய மரம் அன்பளிப்பார்.ஹஹஹஹா தொடர்ந்து எழுதுங்கள்  அண்ணா
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline supernatural

Re: திகில் கதை
« Reply #7 on: September 28, 2012, 02:01:15 PM »
peykkaathal arumai..
puthumaiyaana karu..
nalla yosikkureenga boss.. :P
thodarattum kavippayanam.. .... :D :D
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline kanmani

Re: திகில் கதை
« Reply #8 on: November 05, 2012, 01:38:04 PM »
kavidhai na verum kaadhal , iyarkaiya varnikaradhu nu ilama oru thriller storya konduvandhirukeenga
nice .. inum ungal thiramai velikonaranumnu ketukaren