இயற்கை காற்றில் நனைந்தோம்
செயற்கையாய் வாழ்கிறோம்...
சிறு சிந்தனை கூட
நமக்கு வலிமையே
இயற்கையை நாம் நேசித்தால்...
விற்று விடும் உன் மரபு
தொட்டு விடும் உன் வரவு
ஒரு வான வேடிக்கையாக...
நிமிர்ந்து நீ நில்லடா
எங்கும் நீ செல்லடா
உன் கயவர்களை கொல்லடா
வேத கானம் முழங்கடா
உனக்கு நிகர் இல்லையடா...