Author Topic: மிளகாய் பஜ்ஜி  (Read 875 times)

Offline kanmani

மிளகாய் பஜ்ஜி
« on: October 31, 2012, 10:14:54 AM »
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது பஜ்ஜி போட பயன்படுத்தும் மிளகாயை வைத்து, ஈஸியான முறையில் பஜ்ஜி செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்போது அந்த மிளகாய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
பஜ்ஜி மிளகாய் - 4 (இரண்டாக கீறியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
வரமிளகாய் - 2
புளி - சிறிது
பூண்டு - 4 பல்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடேற்ற வேண்டும்.

அதற்குள் அந்த அரைத்து வைத்துள்ள கலவையை, இரண்டாக கீறி வைத்துள்ள மிளகாயின் நடுவின் உள்ள விதைகளை நீக்கி, அதனுள் வைத்து, பின் பிரட்டி, எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான மிளகாய் பஜ்ஜி ரெடி!!!