என் வரிகள் ஒவ்வொன்றும்
வசீகரமாய் இருப்பதாய் சொல்லி
சொல்லி ரசிக்கும் வசீகரியே !
வசீகரத்திற்கு காரணம் ஏதும் ரகசியமில்லை
வசீகரியுன்னை வசீகரித்திடவே
வார்த்தைகளை வசப்படுத்தி
வசபடுத்திய வார்த்தைகளை வரிசைபடுத்தி
வரிவரியாய் வரைந்திடும் ,
வரிகள் வசீகரம் !!
வசீகரம் !!