கவின்மிகு கவிதையேதும்
எழுதிடும் குறிக்கோளுடன்
கவிஎழுத அமர்வதில்லை
நிச்சயமாய் ஓர்நாளும்
உன் நினைவுத்தடத்தினில்
கற்பனைக்குதிரைகளின் தடம்பதிய
ஓடவிட்டேதான் அமர்ந்திடுவேன்
கவிஎழுத கரிக்கோளுடன்
வெளிப்படும், வரிகளின்
வனப்பிற்கும் ,வசீகரத்திற்க்கும்
வளமான , நின் நினைவே
துணை ..!!