Author Topic: ஹாட் & சோர் பாஸ்தா  (Read 1020 times)

Offline kanmani

ஹாட் & சோர் பாஸ்தா
« on: October 25, 2012, 01:09:02 AM »


    பாஸ்தா - ஒரு பாக்கெட்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளாகாய் - 2
    குடைமிளகாய் - பாதி
    கேரட் - ஒன்று
    பட்டை - ஒரு துண்டு
    கிராம்பு - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    முட்டை - 2
    தயிர் - கால் கப்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    
தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து பாஸ்தாவை சேர்த்து வெந்ததும் வடித்து கொள்ளவும்.
   
வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்..

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   
பிறகு தக்காளி, கேரட், குடை மிளகாய் சேர்க்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்..
   

அதில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
   
தூள் வாசம் போனதும் தயிர் சேர்க்கவும்.
   
எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.
   
வெந்த பாஸ்தாவை அதில் கலந்து நன்கு பிரட்டி விடவும்.
   
சுவையான ஹாட் & சோர் பாஸ்தா தயார்.