ஒரு பத்தியை கிட்ட தட்ட ஐந்துவிதமாய் மாற்றி பார்த்திருக்கிறோம், ஐந்து ஆறாம் வடிவத்தில் சில வார்த்தைகள் கூட குறைய இருக்கிறது
ஒரு கருத்த்தை வெவ்வேறு விதமாய் சொல்லி பார்த்திருக்கிறோம், இதில் கூர்மையான வடிவமாய் எனக்கு தோன்றியது 3 மற்றும் 5வது வடிவங்கள்
இந்த வடிவ சோதனைகள் கவிதையில் இன்னும் பல கோணத்தை கூட்ட உதவுவதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்
இப்படி ஒவ்வொரு பத்தியிலும் சில சோதனைகளை செய்து எழுத முயல்வதன் மூலம் கவிதை வடிவம் மேலும் சிறப்பானதாக அமையும்
கவிதை ஒரு ரூபமற்ற நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது, ஒரு புள்ளியில் வடிவமிழந்து, வகைமை இழந்து, அழகு இழந்து, தன் முழுமை அனைத்தையும் இழந்து எது தான் எனும் தன்மை இழந்து, எது கவிதை எனும் கேள்விக்கு போய் நிற்கும்
அந்த புள்ளி மீண்டும் கவிதைக்கான ஒரு புத்திலக்கணம் எழுதிய வேண்டிய கட்டாய தருணத்திற்கு ஆளாகும்
அப்போது இதுகாறும் எழுதப்பட்ட கவிதைகள் ஒட்டு மொத்தமாய் புறக்கணிக்கப்படவும், ஒரே அடியாய் புறந்தள்ளப்படவும் வாய்ப்பிருக்கிறது அல்லது வலியன வாழும் எனும் தத்துவப்படி செழுமையானமை செறிவானவை உய்த்திருக்க வாய்ப்பிருக்கிறது, அந்த உய்வில் நாமும் உய்க்க ஒரு முறையேனும் பிரயத்தனிக்க வேண்டாமா ?
அப்படி ஒரு கவிதையை எழுத முயல்கிறோம் எனும் திருப்தியும், நேர்மையும், குறைந்த காலமாவது நம் கவிதைகள் வாழ ஒரு வெளியை தரும், அதற்காக வேணும், புது வடிவங்களை முயல்வோம்
மேலும் பேசுவோம் ..