நல்லா இருக்கு லீ
சில இடங்களை மிகவும் ரசித்தேன்
//மழை துளிகள்
குளத்தில் மோதி
குமிழிகளாய் குவிந்திட
//
//பூவின் மடியில் உறங்கும்
வண்ணத்து பூச்சி
முகம் சுழிக்க.
//
//நீரில் நீந்தும் நிலவில்
சாயம் தோயும் //
சுற்றி வலைச்சு தட்டையா ஒரு விடயத்தை சொல்லாமல் சுருக்கமாக அழகாக திறந்தான் கவிதைக்கை தேவை
//தென்றல் தீண்ட
சிவக்கும் பூக்கள்
நாணத்தால் தலை
திருப்பும்
//
நாணத்தில் இமை கவிழும், தலை சாயும், திரும்பாது, லீ
//தாமரை
நிலவை தொட்டு விட
காதல் காற்றின் கரம் பிடித்து
மிதந்து வரும்
//
நிலவு வரும் நேரம் தாமரை அலர்ந்திருப்பதில்லை, இங்கேயும் கொஞ்சம் மராமத்து பார்க்க வேண்டியிருக்கு
உங்க வரியை படிக்கும் போது சும்மா யோசிச்சேன்
நிலவில் பூத்த தாமரை - அவள்
முகத்தில் பூத்த புன்னகை
வாழ்த்துக்கள் லீ