Author Topic: ~ உலகசாதனை புத்தகம் உருவான கதை !!!!! ( GUINNESS BOOK ) ~  (Read 865 times)

Offline MysteRy

உலகசாதனை புத்தகம் உருவான கதை !!!!! ( GUINNESS BOOK )




1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக் கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Offline Anu

miga payanulla thagaval Mystery.guiness book of records nu taan paarthu padichitu porom.idhuku pinnaalla ivlo periya kadhai iruka. interesting..manushan ellaathaiyum melottama paarthe pazhakittaan. aduku pinnaala ethana peru ethana kastangala pattu adhu uruvaaki irupangannu yosikiradhe illa.. avasara ulagathula ellaame avasarama thaan iruku.avarsama porandhu avasarama vaaznthu avasarama irandhum poraan manushan. vaazkaiyin thatthuva thaan marandhe poraanga. indha avasara ulagathula..
mystery superb. ungaloda ella padhipugalum miga payannula thagavalaa iruku.
melum thodara en manamaarndha vaazthukkal :)


Offline MysteRy