Author Topic: காதழியம் = காதல் + இதழ் + காவியம்  (Read 738 times)

Offline Anu

பொம்மை கேட்டு
அழும் குழந்தை
போல
உன்னை கேட்டு
அடம் பிடிக்குது
என் மனம்

* * *
அழும் குழந்தையை
கிள்ளுவதாக
உன் கூந்தலை
கலைந்து செல்கின்றது
காற்று..

* * *
வடம் பிடித்து
தேரிழுத்து
வணங்க சொல்வது
கடவுள்..
உன் கை பிடித்து
உடனிழுத்து
நெருங்க சொல்வது
காதல்..

* * *
என் காதலை விட
அழகானவள் நீ..
என் கவிதைகளில் எல்லாம்
கருத்தானவள் நீ..
* * *
உன் வெட்கங்களை எல்லாம்
அனைக்க பார்க்கிறது
என் தேடல்..
என் தேடல்களை எல்லாம்
தடுக்க பார்க்கிறது
உன் வெட்கம்..

* * *
வரிகள் எழுதி
கவிஞனாகும் ஆசையில்லை..
விழிகள் படித்து
கவிஞனாகும் வரம்
மட்டும் வேண்டும்..

 * * *
எழுதியவர் தினேஷ்


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
உன் வெட்கங்களை எல்லாம்
அனைக்க பார்க்கிறது
என் தேடல்..
என் தேடல்களை எல்லாம்
தடுக்க பார்க்கிறது
உன் வெட்கம்

அருமையான வரிகள் அனுமா பகிர்வுக்கு நன்றிகள்
                    

Offline Anu

Nandri Rose dear