Author Topic: INORU PIRAVI VILAGAMAL UNNODU  (Read 572 times)

Offline ME IDIOT

INORU PIRAVI VILAGAMAL UNNODU
« on: October 11, 2012, 11:29:17 PM »
இன்னொரு பிறவி வேண்டும்
உன் மனதோடு போரிட்டு வெற்றி பெற,
நகல்களாய் நகரும் இந்த பிறவியின் நினைவுகளை நிஜமாக்க ,
முகம் சுளித்து செல்லும் உன் உதடுகளின் ஓரம் என் பெயரின் உறக்கத்திற்காக ...
அகம் புதைத்த என் உணர்சிகளுக்கு உயிர் குடுக்க ...
காகித கறைகளாய் தோன்றும் என் கவிதை எல்லாம்
உன் விழிபட்டு என் காதலை உணர்த்த ,
விரட்டி அடிக்கும் உன் விழிகளில் விலகாத பிம்பமாய் நிறைந்திட
உன்னை நினைத்து நினைத்து நிமிடங்களை நகர்த்த ,
நேசித்து நேசித்து நெஞ்சுருகி , நினைவடக்கி
 நிறைபெறும் என்  வாழ்க்கையின் வரிகளை உன்னை நிரப்ப,
உன் விரல் பிடித்தே என் உயிர் பிரிய வேண்டுமடி "இன்னொரு பிறவி ...." உன்னோடு விலகாமல் .....

Offline Global Angel

Re: INORU PIRAVI VILAGAMAL UNNODU
« Reply #1 on: October 15, 2012, 02:38:07 AM »
Quote
விரட்டி அடிக்கும் உன் விழிகளில் விலகாத பிம்பமாய் நிறைந்திட
உன்னை நினைத்து நினைத்து நிமிடங்களை நகர்த்த ,
நேசித்து நேசித்து நெஞ்சுருகி , நினைவடக்கி
 நிறைபெறும் என்  வாழ்க்கையின் வரிகளை உன்னை நிரப்ப,
உன் விரல் பிடித்தே என் உயிர் பிரிய வேண்டு

ஒவொரு உறவும் இதைத்தான் எதிர் பார்கின்றது    கிடைத்தவன் பாக்கியவான் கிடைக்காதவன் ஏழை ...

அருமை .. நன்றிகள் இடியோட்
                    
Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: INORU PIRAVI VILAGAMAL UNNODU
« Reply #2 on: October 15, 2012, 04:01:52 PM »
//விரட்டி அடிக்கும் உன் விழிகளில் விலகாத பிம்பமாய் நிறைந்திட
உன்னை நினைத்து நினைத்து நிமிடங்களை நகர்த்த ,
நேசித்து நேசித்து நெஞ்சுருகி , நினைவடக்கி
 நிறைபெறும் என்  வாழ்க்கையின் வரிகளை உன்னை நிரப்ப,
உன் விரல் பிடித்தே என் உயிர் பிரிய வேண்டுமடி//

இது போன்ற வரிகளை வாசிக்கும் போதே மனசை பிசைய ஆரம்பிக்கும்

மிக அழகிய கவிதை தோழரே

தொடருங்கள்
அன்புடன் ஆதி