Author Topic: ~ இட்லி..தோசை..அடை ~  (Read 1958 times)

Offline MysteRy

~ இட்லி..தோசை..அடை ~
« on: September 21, 2012, 01:41:00 PM »
QUINOA (திணை) தோசை

தேவையானவை:

திணை 1 கப்
brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

QUINOA (திணை)



திணை,brown rice  இரண்டையும் தனித்தனியாகவும் உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு இரண்டையும் ஒன்றாகவும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.தோசைமாவு பதத்திற்கு அரைத்து தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவை ஐந்து மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்..
இதில் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது.



இதற்கு பொருத்தமான் சட்னி வேர்க்கடலை சட்னி.

தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

தேவையானவையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் தாளிக்க வேண்டும்

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #1 on: September 21, 2012, 01:47:19 PM »
குடலை இட்லி

தேவையானவை:

பயத்தம்பருப்பு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
தொன்னை 10
உப்பு,எண்ணெய்  தேவையானது
-------
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம்  1 துண்டு
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு  10
தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தொன்னையில் இட்லி மாவு






செய்முறை:



பயத்தம்பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். ஊறினபின் இரண்டையும் ' கொட கொட' என்று அரைத்து தேவையான உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.அரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.அதை 8 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும்.
மிளகு,சீரகம் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
இஞ்சி பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
-----------
வாணலியில் நெய்வைத்து காய்ந்ததும் முந்திரிபருப்பை வறுக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் உடைத்த மிளகு,சீரகம் போட்டு வதக்கவேண்டும்.
கடலைபருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி இதனுடன் சேர்க்கவேண்டும்.
தேங்காய் துண்டுகளையும் இதனுடன் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அப்படியே மாவில் சேர்க்கவேண்டும்.
இப்பொழுது ' குடலை இட்லி மாவு ' ரெடி.
----------
தொன்னையை எடுத்துக்கொண்டு அதில் நன்றாக எண்ணெய் தடவவேண்டும்,முக்கால் பாகத்திற்கு மாவை விட்டு தொன்னையுடன் அப்படியே இட்லி தட்டில் வைத்து
குக்கரில் 15 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவேண்டும்.
'குடலை இட்லி' யை அப்படியே சாப்பிடலாம்.
வேண்டுமென்றால் தேங்காய் சட்னி,தக்காளி சட்னி side dish ஆக வைத்துக்கொள்ள்லாம்.

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #2 on: September 21, 2012, 01:50:48 PM »
ராகி (கேழ்வரகு) தோசை

தேவையானவை:

ராகி



ராகி மாவு2 கப்
அரிசி மாவு 1 கப்
தயிர் 3/4 கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காய்த்தூள் 1 தேக்கரண்டி

செய்முறை:



ராகி மாவு கடைகளில் கிடைக்கும்.இல்லாவிடில் ராகியை வாங்கி காயவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளலாம்.
தயிரை நன்கு கடைந்து ராகி மாவு,அரிசிமாவு,தேவையான தண்ணீர்,உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.(ரவை தோசை மாவு பதம்)

கரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிப்போடவும்.
சீரகத்தை உள்ளங்கையில் தேய்த்து போடவும்.
பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிப் போடவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

அடுப்பில் தோசைகல்லை வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து சுற்றி ஊற்றவும்.
எண்ணையை சுற்றி ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.

ராகி தோசைக்கு தக்காளி சட்னி,பச்சைமிளகாய் சட்னி சிறந்த side dish.

அரிசி கோதுமையை விட ஊட்ட சத்து நிறைந்தது ராகி.
புரதம்,சுண்ணாம்பு,இரும்புச்சத்து.நார்ச்சத்து எல்லாம் நிறைந்தது.

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #3 on: September 21, 2012, 01:53:33 PM »
ஓட்ஸ் இட்லி

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
ரவை 1 கப்
தயிர் 1 1/2 கப்
காரட் 2
உருளைக்கிழங்கு 1
பீன்ஸ் 10
பட்டாணி 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஓட்ஸையும் ரவையயும் தனித்தனியாக எண்ணையில்லாமல் வறுக்கவும்.

பின்னர் தனித்தனியாக தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கிகொண்டு பட்டாணியுடன் microwave ல் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும்.

முந்திரிபருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2 கப் தயிர் விட்டு
அதனுடன் தண்ணீரில் ஊறவைத்த ஓட்ஸையும் ரவையையும் சிறிது உப்புடன் சேர்த்து மீண்டும் 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
15 நிமிடம் கழித்து தயிரில் துருவிய காரட்.உருளைக்கிழங்கு,இஞ்சி,வேகவைத்த பட்டாணி,பீன்ஸ்,வறுத்த முந்திரி எல்லாவற்றையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இட்லி தட்டில் எண்ணைய் தடவி ஓட்ஸ் இட்லி மாவை ஊற்றி ஆவியில் 12 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
இதற்கு side dish வெங்காய காரச்சட்னி .

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #4 on: September 21, 2012, 01:56:04 PM »
கல் தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப்

பச்சரிசி 1 கப்

உளுத்தம்பருப்பு 1 கப்

வெந்தயம் 1 டீஸ்பூன்

உப்பு, நல்லெண்ணய் தேவையானது



செய்முறை:

புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஒன்றாக 8 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பின்னர் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

தோசை மாவு கெட்டியாகவும் இல்லாமல் மிகவும் நீர்த்தும் இல்லாமல் மிதமான பதத்தில் இருக்கவேண்டும்.

மாவு புளிக்க வேண்டிய அவசியமில்லை.அரைத்த உடனே வார்க்கலாம்.

தோசை வார்க்கும் போது தோசைக்கல் சூடானதும் எண்ணைய் தடவி ஒரு கரண்டி மாவை மெல்லியதாக வார்க்கவேண்டும்.

தோசை முழுவதும் வெந்ததும் திருப்பி போடாமல் அப்படியே எடுத்து விடவும்.

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #5 on: September 21, 2012, 01:58:09 PM »
பயத்தம்பருப்பு தோசை

தேவையானவை:

பயத்தம்பருப்பு    3 கப்   
புழுங்கலரிசி 3/4 கப்
பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



பயத்தம்பருப்பு அரிசி இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசி,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம்,
இஞ்சி,கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில்
அரைக்கவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம்..
தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #6 on: September 22, 2012, 02:52:56 PM »
ரவா தோசை

தேவையானவை:

ரவா 1 கப்
இட்லி மாவு or
அரிசி மாவு 1 கப்
மைதா மாவு 1 கப்
மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது

செய்முறை:



ரவையை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
இட்லி மாவையும் மைதாமாவையும் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்த ரவாவை அதனுடன் கலந்து சற்று நீர்க்க கரைக்கவும்.
மிளகு,சீரகம்,கறிவேப்பிலை மூன்றையும் எண்ணையில் பொறித்து போடவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி பச்சையாக போடவும்.
-------
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.
« Last Edit: September 22, 2012, 02:55:09 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #7 on: September 22, 2012, 02:54:39 PM »
கீரை அடை

தேவையானவை:

முளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கலரிசி 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு

------

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



பொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி Microwave 'H" ல் ஒரு நிமிடம்

சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)

6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).

அரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி

சுற்றி எண்ணைய் விடவேண்டும்.

நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்

முளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..

Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #8 on: September 22, 2012, 02:57:09 PM »
செட் தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 1 கப்

பச்சரிசி 1 கப்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்

நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.

வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.

இதற்கு side dish இட்லி மிளாகாய் பொடி,தேங்காய் சட்னி.


Offline MysteRy

Re: ~ இட்லி..தோசை..அடை ~
« Reply #9 on: September 22, 2012, 02:59:05 PM »
பயத்தம்பருப்பு தோசை

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:



புழுங்கலரிசி,பயத்தம்பருப்பு,வெந்தயம் மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் வடிகட்டி தேவையான உப்புடன் நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பச்சைமிளகாயையும்,இஞ்சியையும் பொடியாக நறுக்கிப்போடவும்.
கொத்தமல்லித்தழையை நன்கு அரிந்து பொடியாக நறுக்கிப் போடவும்.

அடுப்பில் தோசைக்கல் சூடானவுடன் மாவை ஊற்றி எண்ணைய் சிறிது விட்டு
இரு பக்கமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

இதற்கு side dish வெங்காயச் சட்னி.