Author Topic: நம் இறை தேடல்  (Read 675 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நம் இறை தேடல்
« on: September 21, 2012, 01:42:33 PM »
உண்டு என்பதிலும் உள்ளான்
இல்லை என்பதிலும் உள்ளான்
இறைவன்..

உண்டு என்பதற்கு உடன்பட்டுத்தான்
இல்லை என்கிறோம்
இல்லை என்பதற்கு உடன்பட்டுத்தான்
உண்டு என்கிறோம்..
உண்டும் இல்லையும் ஒன்று
இரண்டிலும் இறைவன் உண்டு..

பிறக்கும் முன் நாமில்லை
இறந்தப் பின் நாமில்லை
எனினும் இன்று நாமிருப்பது உண்மை..
இவ்வாறே இறைமையும்..

எங்கும் இருப்பவனை
இங்கிரு என கோவில் அடைப்போம்
வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு
வேண்டுதலாய் பொன் பொருள் படைப்போம்
பேரண்டம் ஆக்கியவனை
ஊரண்ட விடோம்
இருவினைக் கடந்தவனை
இருக்கும் பேதங்களால் பிரிப்போம்..
உயிர் கொடுத்தவனுக்கு
உயிர் பலிக் கொடுப்போம்..

ஒரு நாள் இறைவனையும் எரிப்போம்
தேவதூஷனம் என்போம்..
பிறகொரு இறைவனை தேடி திரிவோம்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: நம் இறை தேடல்
« Reply #1 on: September 21, 2012, 01:50:19 PM »
Quote
பேரண்டம் ஆக்கியவனை
ஊரண்ட விடோம்


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞான தங்கமே ... இந்த சொங்க்தன் ஞாபகத்துக்கு வருகுது ஆதி ... மூட பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் இறைவனிடத்தில் இருந்து நம்மை அந்நிய படுத்துகின்றன ....அருமையான கவிதை
                    

Offline Anu

Re: நம் இறை தேடல்
« Reply #2 on: September 21, 2012, 02:10:37 PM »
உண்டு என்பதிலும் உள்ளான்
இல்லை என்பதிலும் உள்ளான்
இறைவன்..

உண்டு என்பதற்கு உடன்பட்டுத்தான்
இல்லை என்கிறோம்
இல்லை என்பதற்கு உடன்பட்டுத்தான்
உண்டு என்கிறோம்..
உண்டும் இல்லையும் ஒன்று
இரண்டிலும் இறைவன் உண்டு..

பிறக்கும் முன் நாமில்லை
இறந்தப் பின் நாமில்லை
எனினும் இன்று நாமிருப்பது உண்மை..
இவ்வாறே இறைமையும்..

எங்கும் இருப்பவனை
இங்கிரு என கோவில் அடைப்போம்
வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு
வேண்டுதலாய் பொன் பொருள் படைப்போம்
பேரண்டம் ஆக்கியவனை
ஊரண்ட விடோம்
இருவினைக் கடந்தவனை
இருக்கும் பேதங்களால் பிரிப்போம்..
உயிர் கொடுத்தவனுக்கு
உயிர் பலிக் கொடுப்போம்..

ஒரு நாள் இறைவனையும் எரிப்போம்
தேவதூஷனம் என்போம்..
பிறகொரு இறைவனை தேடி திரிவோம்..
superb aadhi..
ungala pola azhaga vaarthaigalla solla therla.
ovvoru variyum pala nooru arthangalai solludhu.
nandri pagirndamaiku ..