Author Topic: உன்னையே சுவாசிக்கும் என்னை நேசி..  (Read 1196 times)

!! AnbaY !!

  • Guest
எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..