என் ஒவ்வொரு சுவாசக் காற்றும்
உன்னை நினைத்தே உள் செல்கிறது
ஒவ்வொரு முறையும் உன்னை என் உயிரில்
கலந்து விட்டு செல்லும் சுவாசம் வெறும்
காற்றாய் வெளி வருகிறது
உன் நினைவுடன் செல்லும் என் சுவாசம்
நுரையீரலையும் தாண்டி என்
உயிரை நனைக்கிறது
என் பிராண வாயுவில்
பிராதனமாக நீ மிதந்து வருவதால்
விரிந்த என் நுரையீரல் கூட
சுருங்க மறுக்கிறது ...
என் சுவாசம் நிற்பதால் நீ வருவது
நிற்க போவதில்லை உயிரே...
நீ வருவது நின்றுவிட்டாலே
என் சுவாசம் வருவதை நிறுத்திவிடும்